பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, வீட்டிற்கு உணவு வாங்கவும் உணவு பொருட்கள் வாங்கவும் காசு இல்லாமல் தவிக்கும் கண்ணன் ஐஸ்வர்யா தங்கள் செயலை எண்ணி வருத்தப்படுகிறார்கள். ஐஸ்வர்யா தனக்கு நாப்கின் வாங்கக்கூட காசு இல்லாததை கூற கண்ணன் உடைந்து போகிறார்.
பின்னர், பாண்டியன் ஸ்டோர் சகோதரர்கள் கொடுத்தனுப்பிய மளிகை பொருட்கள் வந்த பிறகு கண்ணன் மிகவும் வருந்தி அழுகிறார். இன்னொரு பக்கம் தாங்கள் குழந்தை பெற்ற அனுபவங்களை தனத்தின் அம்மாவும் மீனாவும் கூறிக்கொண்டிருக்க தனத்திற்கு பொய் வலி வர ஆரம்பிக்கிறது. இது சாதாரணமாக வரக்கூடிய வழி என்று கூறி குடும்பத்தினரை தனத்தின் அம்மா சமாதனம் செய்கிறார்.
அடுத்த வாரம் எனக் காட்டப்படும் புரோமோவில் லட்சுமி அம்மா சுயநினைவின்றி இருக்க குடும்பமே அதிர்ச்சி ஆகிறது மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்