தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,551 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,551-ஆக உள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21-ஆக உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 34,856-ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 230 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்ததாக சென்னையில் 182, செங்கல்பட்டில் 122, ஈரோடு மாவட்டத்தில் 115 தொற்றுகள் பதிவாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. நேற்றைய ஒரு நாளில் தமிழகம் முழுக்க 1,768 பேர் குணமாகி விடு திரும்பி உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை புதிய தொற்றின் விகிதத்தை விட மீட்பு விகிதமே அதிகமாக இருக்கிறது.

கொரோனோவைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களைக்காட்டிலும் தமிழகம் மிகவும் தேர்ச்சி பெற்ற மாநிலமாகவே திகழ்கிறது. 24 மணி நேரமும் தடுப்பூசி, ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவு, அந்தந்த மருத்துவமனைகளே அதற்கு தேவையான் ஆக்சிஜனை தயாரித்துக் கொள்ளும் அளவுக்கு திட்டங்கள் வகுத்திடுதல் என்று கொரோனோவை திறம்படவே தமிழகம் எதிர்கொள்கிறது.

எனினும் இனி வரும் பண்டிகை காலம் என்பது தமிழகத்திற்கு முக்கியமான கட்டம் ஆகும். அதை முறையாக கையாண்டு விட்டால் இனி வரும் நெருக்கடி காலங்களில் தொற்றை எதிர்கொள்வது கொஞ்சம் இலகுவாகும் “

About Author