நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று, மாயன் நாச்சியாருடன் போவதை எண்ணி மாறன் கடுப்பில் இருக்கிறார். நாச்சியார் அவரிடம் சமாதானம் செய்யப் போக, அவரையும் அவமானப்படுத்துகிறார்.
பின்னர் சிதம்பரம், மாசானி, மற்றும் வடிவு சேர்ந்து மாயன் மாறன் சண்டை போடுவது தங்களுக்கு நலமே என முடிவு செய்கிறார்கள். நாச்சியார் மாயன் மேல் உள்ள பாசத்தில் உருக, மாயன் அவர்களுடன் என்றும் இருப்பேன் என வாக்குறுதி அளிக்கிறார். இதைப்பார்த்து சரண்யாவும் நெகிழ்ச்சி அடைய, மாறனும் சாரதாவும் கோபம் கொள்கிறார்கள்.
கிளம்ப எத்தனிக்கும் மாயன் குடும்பத்தினரை பார்த்து கடுப்பில் மாறன், மஹாவை கூப்பிட்டு எச்சரிக்கிறார். மாறனுக்கு மஹா சரியான பதிலடி கொடுக்க, மாயன் மகிழ்கிறார்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்