பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, எப்படியாவது தன் தாயை சந்தித்து விட வேண்டும் என கண்ணன் அண்ணன்களிடம் கெஞ்சுகிறார். மூர்த்தியோ கோபமாக ஜீவாவிடம், “அவனை உள்ளே அனுப்பாதே” என கூறி விட்டு வீட்டிற்கு செல்கிறார்.
வீட்டிலும் தனம் கண்ணனை உள்ளே ஏற்கக்கூடாது எனக் கூற, முல்லையும் அவரது கோபத்தை வெளிப்படுத்துகிறார். மீனா கண்ணனுக்கு பாவம் பார்த்து லட்சுமியிடம் இந்த விஷயத்தை கூற, அவரும் “என்னை அவன் பார்க்க கூடாது” என தீர்க்கமாக கூறிவிடுகிறார். கண்ணனை மீனா திருப்பி அனுப்பி வைப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்