தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சந்திரகலா வீட்டிற்கு சென்று கோதை கூறியதை கூறினார். பின் சந்திரகலாவும் அங்கு வந்து பேசுவதாக கூறி அனுப்பினார். தமிழ் கிளம்பியதும் ஒளிந்து இருந்த கலா மீண்டும் சந்திரகலாவிடம் பேசி அவர் மனதை மீண்டும் நஞ்சு ஆக்கினார். கோதை வீட்டிற்கு வந்த சந்திரகலா எதற்கு அழைத்தீர்கள் என கேட்க, கோதையும் தனது தொழிலாளர்கள் வந்து செல்ல வசதியாக உள்ள மண்டபம் தான் பார்த்திருப்பதாக கூறினார். உங்களின் வி.ஐ.பி ககள் எங்களுடைய தொழிலாளர்கள் அனைவருக்கும் வசதியாக இருக்கும் என்று கூறுகிறார். சந்திரகலாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழி இன்றி ஒத்துக்கொள்கிறார். சொக்கலிங்கம் தன் மகள் சொல்லும் எதையும் நம்பவில்லை. இந்த திருமணம் நடந்தே தீரும் என்று கூறுகிறார். அடுத்து என்ன நடக்கும்? காணொளியை பார்க்க..