பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ராதிகா கோபியிடம் சேலையை குறித்து சந்தேகப்படுகிறார். கோபி பாக்கியாவை ஏமாற்றியது போல், ராதிகாவையும் ஏமாற்றுகிறார்.
பின்னர், அமிர்தாவிடம் எழில் பேசிக்கொண்டிருப்பதை இனியா பார்த்து அண்ணனை கிண்டல் செய்கிறார். இரவில் தனக்கு கோபி வாங்கி வந்த சேலையை அணிந்து பார்ப்போம் என அணிந்து பார்க்கிறார் பாக்கியா. அதை கோபியிடமும் காட்டுகிறார். கோபி முதலில் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், பின்னர் நன்றாக இருக்கிறது எனக் கூற பாக்கியா தரையிலேயே பறக்கிறார்.
அடுத்த நாள், தங்கள் பள்ளியில் நடக்கும் அன்னையர்தின விழாவிற்கு வருமாறு இனியா பாக்கியாவைஅழைக்க மிகுந்த யோசனைக்குப் பிறகு அவரும் ஒத்துக்கொள் நினைக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்