கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 39,521 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,521 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் 218 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,40,785-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 100 பேருக்கு தலா 50.84 பேர் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 43,917 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை பாதிப்பு விகிதத்தை விட மீட்பு விகிதம் அதிகமாகவே உள்ளது. ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் கொரோனோ தொற்றின் விகிதம் இந்தியாவில் இருந்தாலும் இனி வரும் பண்டிகை காலங்களே இந்தியாவின் கொரோனோ நிலைமையை தீர்மானிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை 1592 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழகத்தில் 18 பேர் தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 35,018 பேராக உயர்ந்துள்ளது.

“ பண்டிகைகளை கூட்டம் கூட்டமாக கொண்டாடுவதை தவிர்த்திடுங்கள், இந்த கொரோனோ இன்னும் ஓயவில்லை அது எப்போது வேண்டுமானாலும் நம்மை மீண்டும் ஒரு பேரிடர் நிலைக்கு தள்ளலாம். தொடர்ந்து முகக்கவசம் அணியுங்கள் தனிமனித இடைவெளிகளை முறையாக கடைப்பிடியுங்கள், பரவலை தடுத்திடுங்கள் “

About Author