நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று கத்தியும் மாயனும் வீட்டு வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்கள். இதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மாயன் கத்தியிடம் கூறுகிறார்.
இன்னொரு பக்கம், சரண்யா குடும்பத்தின் நிலைமைக்காக வேலை தேடுகிறார். ஐஸ்வர்யாவின் கல்லூரி கட்டணம், வீட்டுக்கு தேவையான பொருட்கள் என நிறைய தேவைகள் இருப்பதால், நாச்சியார் தனது நகைகளை அடகு வைக்க முடிவு செய்கிறார். அவருக்கு உதவ அவர் நகையை அடகு வைக்க வேண்டாம் எனவும், எங்கள் நகையை அடகு வைத்துக் கொள்ளுங்கள் என சகோதரிகள் கூறுகிறார்கள். இந்த விஷயம் அறிந்த மாயன் அவர்களை திட்டி தான் பார்த்துக் கொள்வதாகக் கூறுகிறார். பின்னர், தனது செயினை அடகு வைத்த பணத்தையும் கொடுக்கிறார். இதைக்கண்டு நாச்சியார் நெகிழ்வதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள வீடியோவைப் பார்க்கவும்