பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்யாவின் நடனத்தைப் பார்த்து கோபி அசந்து போகிறார். கோபியின் பாராட்டை கேட்டதும் பாக்யா மகிழ்ச்சி அடைகிறார். காலையில், எழில் அனைவரிடமும் தன் அம்மா ஆடிய நடனத்தை பற்றி கூற, ஈஸ்வரி இப்பொழுதும் கிண்டல் செய்கிறார்.
இனியாவும் பாக்கியாவும் சேர்ந்து பள்ளிக்கு செல்கிறார்கள். அங்கு இனியாவின் நண்பர்கள் அவர்களது அம்மாக்களை அறிமுகப்படுத்த, அந்த அம்மாக்களும் தங்களது திறமைகளைப் பற்றி கூறுகிறார்கள். நடைபெறும் போட்டியைப் பற்றி அறிந்த பாக்யா சற்றே பயப்படுகிறார். இனியாவும் தனது அம்மாவை பார்த்து இவர் எப்படியும் வெல்ல மாட்டார் என வேதனைப்படுகிறார்.
பின்னர், ராதிகாவும் மயூவும் பாக்கியாவை பார்த்து பேசுகிறார்கள். ஒவ்வொரு அம்மாவும் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, பாக்கியா சமையல் செய்கிறார். அது இனியாவுக்கு பிடிக்கவில்லை. பாத்தியா மேலும் வருந்துகிறார்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்