காற்றுக்கென்ன வேலி இன்றைய சீரியல் எபிசோடில், வெண்ணிலா தன்னை மறந்து உட்கார்ந்திருக்கிறார். அப்பொழுது, சூர்யா இன்று வகுப்புக்கு வர மாட்டார் எனவும் அவருக்கு நிச்சயதார்த்தம் எனவும் அபியின் நண்பர் கூறுகிறார். இதைக்கேட்டு வெண்ணிலா மேலும் உடைந்து போகிறார்.
சூர்யாவின் வீட்டில் நிச்சயதார்த்தத்திற்கு நேரம் நெருங்கிவிட்டது. மணப்பெண்ணின் வீட்டார் வந்து விடுகிறார்கள். சூர்யா சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து அனைவரும் கூச்சம் என தவறாக எண்ணுகிறார்கள். பெண்ணின் வீட்டார் சாரதாவை பற்றி கேட்க அவர் வரமாட்டார் என கூறுகிறார்கள். பின்னர், சரியான நேரத்தில் சாரதா உள்ளே வர மீனாட்சி அதிர்ச்சியாகிறார்.
சாரதா பெண் வீட்டாரிடம் தான் சூர்யாவின் அம்மா என அறிமுகப்படுத்துகிறார். அவமானம் தாங்காமல் மீனாட்சி, தனது அறைக்கு செல்கிறார். அங்கு சிவானந்தம் விஷ்வாவும் மீனாட்சியை மனம் மாற்றி கீழே வந்து நிச்சயதார்த்தத்தை நடத்துமாறு கூறுகிறார்கள். சாரதா சூர்யாவிற்கு தனக்கு ஒத்துவராத ஒரு விஷயத்தை செய்யக்கூடாது என்பதை புரியவைக்க முயற்சி செய்கிறார்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்