தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவங்கியது!

2021-22 கல்வி ஆண்டில் தமிழக வேளாண் பல்கலைக்கழகத்திற்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 8 முதல் www.tnau.ac.in என்ற வேளாண் பல்கலைக்கழகத்திற்குரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை தமிழ்நாடு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த விண்ணப்பத்தின் மூலம் கோவை வேளாண் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் 14 உறுப்புக்கல்லூரிகள் மற்றும் 28 இணை கல்லூரிகளின் கீழ் இருக்கும் 11 துறை சம்மந்தப்பட்ட படிப்புகளுக்கு தகுதியுள்ள மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று பல்கலைக்கழக செயலாளர் அறிக்கை விடுத்துள்ளார்.

இந்த வருடம் முதல் வேளாண் மற்றும் தோட்டக்கலை படிப்புகள் தமிழிலும் துவங்க உள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி,சிவகங்கை,கரூரில் புதிதாக துவங்க உள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரிகளிலும் நடப்பு ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

” கடந்த சில வருடங்களாகவே வேளாண்துறை சம்மந்தப்பட்ட படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவது அத்துறைகளில் நடக்கின்ற மாணவர்களின் அதீத சேர்க்கை மூலம் தெரிய வருகிறது. வேளாண் துறை செழித்தாலே நாடும் செழிக்கும் என்பது மாணவர்களுக்கும் தெரிந்திருக்கும் போல,படிக்கட்டும் நாடும் செழிக்கட்டும் “

About Author