பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கண்ணனுக்கு வேலை தருமாறு ஜனார்த்தனனிடம் கதிர் கேட்க அவர் அதை மறுத்து விடுகிறார். பின்னர், ஜீவா மீனாவிடம் கண்ணனுக்கு உதவுமாறு கேட்கிறார். மீனாவும் தன் அப்பா ஜனார்த்தனனுக்கு போனில் அழைத்து பேசுகிறார். கண்ணன் தவறு செய்தால் அதற்கு ஜீவாவே பொறுப்பேற்க வேண்டும் என்ற உறுதியோடு ஜனார்த்தனன் கண்ணனுக்கு வேலை தர சம்மதிக்கிறார்.
கண்ணன் வேலை செய்யப் போவதை எண்ணியும், அவர் கல்லூரிப் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதை எண்ணியும் தனம் வருத்தப்படுகிறார். பின்னர், ஜனார்த்தனனின் மேனேஜர் கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் அவரது கடைக்கு அழைத்து செல்கிறார். ஜனார்த்தனன்தான் அவர்களுக்கு தங்க வீடு தந்தது என்பதைப் பற்றியும் கூறிவிடுகிறார்.
கடையிலோ கண்ணனை ஜனார்த்தனன் திட்டி, ஐஸ்வர்யாவிடம் கண்ணனை விட்டு செல்ல விருப்பமா எனவும் கேட்கிறார். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்