தமிழகத்தில் இன்று புதியதாக 1,596 பேருக்கு கொரோனோ தொற்று!
தமிழகத்தில் இன்று 9 மணி நிலவரப்படி 1596 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய ஒரு நாளில் மட்டும் 21 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,094-ஆக உயர்ந்துள்ளது.
இது போக இன்று ஒரே நாளில் மட்டும் 1534 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தடுப்பூசி செயல்பாடுகளை பொறுத்தவரையில் தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வசதிகள், ஆக்சிஜன் உற்பத்தி என்று யாவிலும் தமிழக அரசு தன்னிறைவு பெற்றே இருக்கிறது.
அது மட்டுமில்லாது வருகின்ற செப்டம்பர் 12 அன்று தமிழகம் முழுக்க 10,000 முகாம்கள் அமைத்து அன்று ஒரே நாளில் இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக வைத்திருப்பதாக தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு மாநிலமாக மக்களுக்கு இந்த பேரிடர் சூழலில் என்னென்ன தேவையோ அதனை எளிதில் கிடைக்கும்படி செய்திருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியதே!
“ இருந்தாலும் அரசின் செயல்பாடுகள் போக, இந்த கொரோனோவை முழு மூச்சுடன் எதிர் கொண்டிட மக்களாகிய நம்முடைய செயல்பாடுகளும் முக்கியமாக இருக்கிறது, நாம் செய்ய வேண்டியதெல்லாம் மூன்றே மூன்று தான், முறையான முகக்கவசம், தனிமனித இடைவெளி, தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுதல் அவ்வளவு தான், இதைச் செய்தாலே போதும், இந்த சமூகத்தில் கொரோனோவுக்கு எதிரான செயல்பாடுகளில் நம் பங்கும் இருந்த வண்ணம்
இருக்கும் “