கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,291 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 31,291 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 338 ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,42,688 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 37,885 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
தொடர்ந்து இந்தியாவைப் பொறுத்த வரை பாதிப்பு விகிதத்தை விட மீட்பு விகிதமே அதிகமாக இருக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் 73.73 கோடியாக உயர்ந்துள்ளது. சராசரியாக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 83 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். ஆகஸ்ட் மத்தி வரை இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் சராசரி 45 லட்சத்திற்கும் குறைவாக இருந்து வந்தது. தற்போது அந்த சராசரி வெகுவாக உயர்ந்துள்ளது.
” தொற்றின் தன்மை இந்தியாவில் தொடர்ந்து நிலைகொண்ட நிலையிலேயே இருந்து வந்தாலும் மூன்றாவது அலை குறித்த பயமும் ஒரு பக்கம் இருக்க தான் செய்கிறது. சமூகத்தின் தன்மை இயல்பு நிலையில் இருந்தாலும், அதை பேரிடர் என்ற நிலைக்கு மாற்றுவதும் இடரைத் தவிர்ப்பதும் மக்கள் எனப்படும் நம் கையில் தான் இருக்கிறது “