ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றிய டேனியல் மெட்வடேவ் – அமெரிக்க ஓபன் 2021
ஒரே வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம் என்ற ஜோகோவிச்சின் கனவை தவிடு பொடியாக்கியது டேனியல் மெட்வடேவ்வின் அபார ஆட்டம்.
அமெரிக்க ஓபன் ஆடவர் சிங்கிள் இறுதி போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், ரஷ்ய வீரர் டேனியல் மெட்வடேவை எதிர் கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4,6-4,6-4 என்ற நேர்செட் புள்ளி கணக்கில் ரஷ்ய வீரர் டேனியல் மெட்வடேவ், ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றினார்.
இதன் மூலம் ஒரு வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம் என்ற ஜோகோவிச்சின் சாதனை கனவு தகர்ந்தது. உலகின் இரண்டாம் நிலை வீரராக அறியப்படும் டேனியல் மெட்வடேவ், உலகின் நம்பர் ஒன் வீரராக அறியப்படும் ஜோகோவிச்சை தோற்கடித்து தனது முதல் கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றியிருப்பது மிகவும் பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.
“ ஒரு பக்கம் பெண்கள் பிரிவில் 18 வயதே ஆன யம்மா ரடுகானு என்ற இளம் வீராங்கனை கிராண்ட்ஸ்லாம் வென்றிருந்த நிலையில், தற்போது 25 வயதே ஆன டேனியல் மெட்வடேவ் உலகின் நம்பர் 1 வீரரை தோற்கடித்து கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றி இருக்கிறார். இந்த அமெரிக்க ஓபன் களம் இளம் வீரர்களின் ராஜ்யமாகி போயிற்று, அடுத்தடுத்து பார்க்கலாம் அனுபவம் மீண்டு வருகிறதா இல்லை இளமை மீண்டும் ஜெயிக்கிறதா என்று “