இன்று இந்தியாவில் ‘தேசிய பொறியாளர்கள் தினம்’!

National Engineers Day In India

National Engineers Day In India

பொறியாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15 இந்தியாவில் தேசிய பொறியாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் தலைசிறந்த சிவில் இன்ஜினியராக அறியப்படும் பாரத ரத்னா மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரயா அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையிலேயே ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15, இந்தியாவில் தேசிய பொறியாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
உலகளாவிய அளவிலான பொறியாளர் தினம் மார்ச் 4 அன்று அனுசரிக்கப்படுகிறது.

உலகம் முழுக்க இன்ஜினியர்கள் அவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்கிறார்களோ அதே துறையில் வேலையும் செய்து கொண்டிருக்கையில், இந்தியாவில் மட்டும் இது சற்றே கொஞ்சம் மாறுதலுக்குள்ளாகிறது. எடுத்துக்காட்டிற்கு ஒரு 100 இன்ஜினியரிங் படித்த இந்தியர்களை எடுத்துக் கொண்டால், அதில் 30 பேர் மட்டுமே தனது துறை ரீதியான வேலையில் இருப்பதாகவும் மீதி 70 பேர் தனது துறைக்கே சம்மந்தமில்லாத வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருப்பதாகவும் ஒரு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.

வங்கி வேலையாட்கள், மீடியா துறையினர், அரசுத்துறையினர், யூடியூபர்கள், சினிமாக்காரர்கள் என்று இந்திய இன்ஜினியர்கள், இந்தியாவைப் போலவே, இன்ஜினியர் என்ற ஒரு முகத்திற்குள் அடங்கி கொண்டிருக்காமல் பன்முகத்தை கொண்டிருப்பது தான் இங்கு சிறப்பு. படித்ததும் விருப்பபட்டதும் இன்ஜினியரிங் தான் என்றாலும் அந்த துறை அவர்களை நிராகரித்ததும் தன் திறமையின் கீழ் இருக்கும் வாய்ப்புகளை நம்பி அதை பின் தொடரும் இந்தியர்கள் இங்கு அதிகம் காணப்படுகின்றனர்.

“ இன்ஜினியராகவே பணிபுரிபவர்களுக்கும், இன்ஜினியரிங் படித்து விட்டு தன் திறமைகளின் கீழ் தனக்கு பிடித்த மற்றுமொரு துறையின் கீழ் பணிபுரியும் இன்ஜினியர்களுக்கும், தேசிய பொறியாளர் தின வாழ்த்துக்கள் “

About Author