குழப்பத்தில் கோபி? Bakkiyalakshmi today episode 15.09.2021 update
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஜெனியின் கர்ப்பத்தை மருத்துவர் உறுதி செய்து மாத்திரைகள் வழங்குகிறார். செழியன் இன்னும் குழப்பத்திலேயே இருக்கிறார். அமிர்தாவின் வீடு திரும்பி வந்துவிட எழில் அங்கு சென்று அவர்களை பார்க்கிறார். எழிலிடம் போக்குவரத்து செலவை வலியுறுத்தி வாங்கிக் கொள்ளவேண்டும் என அமிர்தாவின் மாமா கூறுகிறார்.
பின்னர், ராதிகாவின் வீட்டுக்கு செல்லும் கோபி, மயூ ஆசைப்பட்டு கேட்ட சிக்கன் லாலிபாப் வாங்கிக் கொண்டு செல்கிறார். என்ன வேண்டுமானாலும் தன்னிடம் கேட்க சொல்லி கூறுகிறார். ஜெனியின் அப்பா அம்மா அவரை பார்க்க வந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். பின்னர் செழியனிடம் ஜெனி பேச, இந்த குழந்தை வேண்டுமா வேண்டாமா என்று யோசித்து முடிவு செய்யலாம் என இப்பொழுதும் செழியன் கூறுகிறார்.
எழில் வீட்டிற்கு வந்து செழியனை பாராட்டியப்பின், அமிர்தாவின் குடும்பம் பற்றி பாக்யாவிடம் கூறுகிறார். கடைசியாக, கோபியிடம் பாக்கியா மகிழ்ச்சியான விஷயத்தை கூற அவரோ திகைத்துப் போய் நிற்கிறார்