பொய் மேல பொய் – Barathi Kannamma today episode 15.09.2021 update
Barathi Kannamma Hema Lakshmi
பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று ஹேமாவை அழைத்துக்கொண்டு அகிலன் கண்ணம்மா வீட்டுக்கு வருகிறார். அங்கு ஹேமாவும் லக்ஷ்மியும் பாரதி வாங்கி தந்த புது துணியை போட்டு வருகிறார்கள். ஹேமாவின் மூலம் என்ன என்பதை மீண்டும் கண்ணம்மா அகிலனிடம் கேட்க, அவரோ பொய் சொல்கிறார். இரண்டு குழந்தைகளையும் பார்க்க இரட்டையர்கள் போல இருக்கிறது என கண்ணம்மா யோசிக்கிறார். பின்னர், லக்ஷ்மி கண்ணம்மாவின் பெண்தான் என்பதை ஹேமாவிற்கு லக்ஷ்மியும் கண்ணம்மாவும் கூறுகிறார்கள்.
பாரதியின் வீட்டில் சௌந்தர்யாவும் வேணுவும் எப்போதும் போல பயந்து கொண்டிருக்க அகிலனும் ஹேமாவும் வருகிறார்கள். கடைசியாக, ஹேமா கண்ணம்மா வீட்டில் நடந்ததை கூற சௌந்தர்யா பொய் கூறி சமாளிக்கிறார். இப்படி பொய் மீது பொய்யாக மாறி மாறிக் அனைவரும் பேசிக்கொண்டிருக்க கதை நகர்கிறது.