இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30,361 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 30,361 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு 432 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,43,960 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 38,361 ஆக உள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட மீட்பு விகிதம் அதிகரித்து வந்தாலும் தற்போது குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்படுவது அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாகவும் மூன்றாவது அலை குறித்த பயத்தையும் தருகிறது.
உலகளாவிய அளவில் எடுத்துக்கொண்டால், நேற்றைய ஒரு நாளில் 8,26,196 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் உலகளாவிய பலி எண்ணிக்கை 15,554 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த உலகளாவிய கொரோனோ பலி எண்ணிக்கை 46.59 லட்சமாக உயர்ந்திருக்கிறது.
“ பள்ளிகள் திறந்ததுமே ஆங்காங்கே குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்படுவது அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. மூன்றாவது அலையை தேசம் நெருங்கி விட்டதோ என்றதொரு பயத்தையும் அளிப்பதாக உள்ளது. கொரோனோ கட்டுப்பாடுகளை முறையாக கையாண்டிடுங்கள், முடிந்தவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள், தற்போது இருக்கும் இந்த சூழலில் இது மட்டுமே இந்த தொற்றினை எதிர்கொள்ள நம் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் “