கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 34,649 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 34,649 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 318 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,44,278 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போக நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37,878 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட தொடர்ந்து மீட்பு விகிதமே அதிகமாக காணப்படுகிறது. தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் கிட்ட தட்ட 76 கோடியைக் கடந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை நேற்று ஒரு நாளில் 1,693 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றுக்கு 25 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி தமிழகத்தில் 35,271 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் 1,548 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
“ அரசின் கொரோனோ தடுப்பு செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இருந்தாலும், இங்கு பரவலைக் கட்டுப்படுத்துகின்ற பொறுப்புகள் மக்களிடம் தான் இருக்கின்றன. அடைத்தும் வைக்க முடியாது என்ற நிலையில் அன்லாக் செய்யப்பட்டாலும் பரவல் தொடந்து நீடித்துக் கொண்டே இருப்பதற்கு காரணம் மக்களாகிய நாம் தான். ஆகவே தொடர்ந்து கொரோனோ கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடித்திடுங்கள். மூன்றாம் அலையைத் தடுத்திடுங்கள் “