தமிழகத்தில் இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் 15 லட்சம் பேரை சென்றடைந்தது!

முதல் மெகா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் 28 லட்சம் பேரை சென்றடைந்த நிலையில், தமிழக அரசு செப்டம்பர் 19 அன்று இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமை அறிவித்திருந்தது. நேற்று அறிவிக்கப்பட்ட படி தமிழகம் முழுக்க நடைபெற்ற இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம்களில்
கிட்ட தட்ட 15 லட்சம் பேர் கலந்து கொண்டு தடுப்பூசியின் பயனை அடைந்துள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 4.3 கோடியைக் கடந்து இருக்கிறது. இதில் முதல் தவணை மட்டும் எடுத்துக்கொண்டவர்கள் 3.37 கோடி பேராகவும் இரண்டடு தவணையும் சேர்த்து எடுத்துக்கொண்டவர்கள் 92.76 லட்சம் பேராகவும் இருக்கின்றனர். ஒட்டு மொத்த இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் நேற்றைய தினம் வரை 81 கோடியைக் கடந்திருக்கிறது.

“ தடுப்பூசி உபயோகம் அதிகரித்ததிலிருந்து இந்தியாவில் தொடர்ந்து பாதிப்பு விகிதம் குறைந்த வண்ணம் இருந்து வருகிறது. தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு சரியான பாதையை நோக்கியே தேசம் சென்று கொண்டிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தங்கள் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் “

About Author