கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 27,333 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,333 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்படுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் தொற்றுக்கு 385 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,45,801 ஆக உயர்ந்துள்ளது.
இது போக நேற்று ஒரே நாளில் 34,148 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து இந்தியாவில் மீட்பு விகிதம் அதிகரித்துக்கொண்டும் பாதிப்பு விகிதம் குறைந்து கொண்டுமே வரும் சூழல் நிலவி வருகிறது. தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில், கிட்ட தட்ட 82 கோடியைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை நேற்று ஒரு நாளில் 1,647 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 19 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,379 ஆக உயர்ந்துள்ளது.
“ தேசமெங்கும் செயல்பட்டும் வரும் தடுப்பூசி செயல்பாடுகளே, பாதிப்புகள் மற்றும் இறப்புகளை வெகுவாக குறைத்து வருவதாக வருத்துவ வல்லுநர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆதலால் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள் உடனடியாக உங்களுக்கான தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுங்கள் “