சோதனை மேல் சோதனை | தமிழக வீரர் நடராஜனுக்கு ‘கொரோனோ’ !

தற்போது தான் மூட்டு பிரச்சினையில் இருந்து குணமாகி வெளிவந்து, ஐபிஎல்-லில் களம் இறங்கலாம் என்று வந்த தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைகிறது.

ஐபிஎல் முதல் கட்ட ஆட்டத்தில் காயம் காரணமாக விலகிய நடராஜன், தொடர்ந்து அதற்காக சிகிச்சை பெற்று வந்ததால் இலங்கைக்கு எதிரான டி20 அணியிலும் வாய்ப்பை இழந்தார். அங்கு ஆடி நிரூபிக்க முடியாததால் உலககோப்பை அணியிலும் நடராஜனால் இடம் பெற முடியவில்லை. தற்போது ஐபிஎல் ஆட வந்த நடராஜனுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இங்கும் ஆட முடியாத சூழல் அவருக்கு உருவாகி உள்ளது.

30 வயதாகும் நடராஜன் ஆஸ்திரேய சீரிஸ்சில் தன்னை நிரூபித்த போதும், தொடர் காயம் காரணமாக அவரின் வாய்ப்பு பறிபோகிக் கொண்டு இருக்கிறது. தற்போது ஐபிஎல் இரண்டாவது கட்டத்தில் பங்கேற்க வந்த அவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மீதி இருக்கும் போட்டிகளிலும் அவர் பங்கேற்பது சந்தேகம் என்றே கூறி வருகின்றனர்.

“ திறமை இருந்தும் காயமும், தகாத சூழலும் அவரை தொடர்ந்து துரத்துவதால் அணியில் ஒரு நல்ல இடத்தை பெற முடியாமல் சோதனைக்கு மேல் சோதனையை அனுபவித்து, மன வேதனையில் இருக்கிறார் தமிழக வீரர் நடராஜன் “

About Author