தமிழும் சரஸ்வதியும் இன்று….. கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்தனர். கார்த்திக் தனக்கு குடி பழக்கம் இல்லை என கூறுகிறார். அதனால் வசுந்தரா கார்த்திக்கு தெரியாமல் மது கலந்து கொடுக்கிறார். இதனால் நிதானத்தை இழக்க…. சந்திரகலாவின் திட்டம் நிறைவேறி விட்டது. உடனே அவர்கள் இருவரையும் ஒரு அறையில் இருக்கும்படி கூறுகிறார்கள். கார்த்திக் வீட்டிற்க்கு செல்ல முயல்கிறார். அதற்குள் சந்திரகளா தமிழ்க்கு தொடர்பகொண்டு தன் மகளை அவன் ஏமாற்றி சென்றதாகவும், மகாபலிபுரம் சென்று இருப்பதாகவும் கூறுகிறார். இது எதையும் நம்பாத தமிழ் நானே நேரில் செல்கிறேன் என்கிறார். ஆனால் வீட்டில் வேறு எதோ காரணம் சொல்லி பின் நமச்சியை அழைத்து மகாபலிபுரம் கிளம்புகிறார்.அங்கு சென்ற அவருக்கு ஒரு அதிர்ச்சி. அங்கு அப்படி என்ன நடந்தது? அடுத்து என்னவாகும்?? காணொளியை பார்க்க..