தப்பித்துக் கொண்ட சூர்யா! Kaatrukkenna Veli today episode 23.09.2021 review
Kaatrukkenna Veli Vennila Moorthy
காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, சூர்யா மாறன் மற்றும் வெண்ணிலாவை நன்கு கவனித்துக் கொள்கிறார். இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே கழித்துவிட்டு தமிழ் ஆகாஷுடன் இருக்கிறார்.
காலையில் பானு மற்றும் சியாமளா சூர்யா வீட்டுக்கு வராததை எண்ணி கவலைப் படுகிறார்கள். விஸ்வநாதன் சூர்யாவின் அறைக்குள் நுழைய, அவர்களது படபடப்பு இன்னும் அதிகரிக்கிறது. ஆனால், அங்கு சூர்யா குளித்துமுடித்து வெளியே வந்ததை பார்த்து சந்தோஷம் அடைகிறார்கள். பின்னர், விஷ்வா போனபின்பு தற்பொழுது தான் சுவர் ஏறி குதித்து வந்தேன் என சூர்யா கூறுகிறார்.
மந்திரமூர்த்திக்கு அதிர்ச்சித் தகவலாக வெண்ணிலாவும் மாறனும் தாக்கப்பட்டது தெரியவருகிறது. அவர் அடித்து பிடித்து மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு மாறனுடன் வெண்ணிலா இருக்கிறார். வெண்ணிலாவுக்கு மாறனின் தந்தை தான் மந்திரமூர்த்தி என தெரியவர அவரும் அதிர்ச்சியாகிறார்.