ஐபிஎல் 2021 | மும்பையை வெளுத்து வாங்கி வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா!

ஐபிஎல் 2021, 34 போட்டியில் மும்பையை தன் அதிரடி ஆட்டத்தில் வீழ்த்தி கதிகலங்க வைத்துள்ளது கொல்கத்தா அணி.

முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 155 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மும்பை தரப்பில் டி காக் 55(42) ரன்களை எடுத்திருந்தார். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா தனது அதிரடியில் மும்பையின் முதல் தர பவுலர்களையும் கூட கதிகலங்க வைத்தனர். வெறும் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 15.1 ஓவர்களிலேயே இலக்கை துரத்திப்பிடித்தது கொல்கத்தா.

வெங்கடேஷ் ஐயர், யார்ரா இவரு என்ற அளவுக்கு வியக்கும் அளவுக்கு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தனது அதிரடியைக்காட்டி அவரின் அணியையே மிரட்டி உள்ளார். 30 பந்துகளில் 53 ரன்கள் அடித்து பும்ரா பந்தில் அவுட் ஆனார். அதற்கு பின் ஆடிய திரிப்பாதியும் தனது பங்கிற்கு மும்பையை துவைத்து 42 பந்துகளில் 74 ரன்களை எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.

“ ஆட்டத்தில் திருப்பம் பார்த்திருப்போம், இங்கு பாயின்ட் டேபிளில் திருப்பம், போட்டிக்கும் முன் மும்பை நான்காவது இடத்திலும் கொல்கத்தா ஆறாவது இடத்திலும் இருந்தது. தற்போது கொல்கத்தா புள்ளி பட்டியலில் மேலேறி நான்காவது இடத்தில் இருக்கிறது. மும்பை கீழிறங்கி ஆறாவது இடத்தில் இருக்கிறது “

About Author