சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள ஆசியாவின் முதல் பறக்கும் கார்!

Asias First Hybrid Flying Car Developed By Chennai Based Vinata Team Members

Asias First Hybrid Flying Car Developed By Chennai Based Vinata Team Members

வினடா ஏரோமொபிலிட்டி எனப்படும் நிறுவனம் ஆசியாவின் முதல் பறக்கும் காரை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

புனேவை தலைமையிடமாக கொண்டு சென்னையில் செயல்படும் ‘வினடா ஏரோமொபிலிட்டி’ நிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள் குழு ஆசியாவின் முதல் பறக்கும் காரை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. ஓட்டுநரே இல்லாமல் இயங்க கூடிய இந்த பறக்கும் கார் 2023 இல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

10,000 அடி உயரத்திற்கு பறக்க கூடிய திறன் உடைய இந்த பறக்கும் கார் அதிகபட்சமாக 120 கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது. முழுக்க முழுக்க ஆட்டோமோட்டிவ் திறனுடன் செயல்படக்கூடியது. ஒரு இடத்திற்கு செல்ல நினைப்பவர் அந்த லொகேசனை பதிவு செய்தால் போதும் இந்த பறக்கும் கார் ஆட்டோமேட்டிக்காக இயங்கி அந்த இடத்திற்கே அவரை கொண்டு செல்லும் திறனுடையது. மேலும் இந்த கார் பெட்ரோல், டீசல் தேவை இல்லாமல் பயோ கேஸ் திறனுடன் இயங்கும் வல்லமை பெற்றது.

“ இந்த கார் மட்டும் பயனுக்கு வந்தால் 2.30 மணி நேர பயணம் அரை மணிநேரத்தில் முடியுமாம், டிராபிக் இல்லாமல் அனைவரும் விண்ணில் பறக்கலாம், அவரவர் வீட்டு மாடியிலேயே கொண்டு காரை இறக்கலாம் என்கிறார் இந்நிறுவனத்தின் தலைவர் யோகேஷ் ராமநாதன் “

About Author