தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 1,733 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழகத்தில் 1,733 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றுக்கு தமிழகத்தில் 27 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கையானது 35,454 ஆக உயர்ந்து இருக்கிறது.

மேலும் நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,631 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் தொடர்ச்சியாக பாதிப்பு விகிதம், மீட்பு விகிதத்தை விட அதிகமாக காணப்படுகிறது. தடுப்பூசி உபயோகம் தமிழகத்தில் 4.36 கோடியைக் கடந்திருக்கிறது. தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 84 கோடியை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.

“ வரும் அக்டோபர் முடிவதற்குள் தகுதியுள்ளவர்களுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசிகள் போய் சேரும் வண்ணம் செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டுக்கள், உங்களுக்கு, உங்களின் வீட்டின் அருகில் தடுப்பூசி வந்து சேரும் போது அதை பெற்று பயன் கொள்வது என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. ஆதலாம் தடுப்பூசியின் பயனை அடையுங்கள், சமூகத்தில் உங்கள் பொறுப்புணர்வையும் கொஞ்சம் இந்த கொரோனோ தடுப்பு கட்டமைப்பினில் சேர்த்திடுங்கள் “

About Author