தமிழும் சரஸ்வதியும் இல் இன்று….. தமிழ் தான் பார்த்த அனைத்தையும் சொக்கலிங்கத்திடம் கூறினார். ஆனால் அவர் சொல்வதை யாரும் கேட்பதாக இல்லை. அந்த மாப்பிள்ளை ரொம்ப நல்லவர் என அனைவரும் கூறுகிறார்கள். தமிழிடம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரும் நிரூபிக்க முடியவில்லை. ஷ்யாம் தான் திருப்பதி சென்றதாக கூறி பிரசாதம் தந்து இனி பொய் சொல்லாதீர்கள் எனவும் நக்கள் செய்ய, தமிழ் கிளம்புகிறார். பின் அதற்கு ஆதாரம் தேடி மகாபலிபுரம் சென்று ஹோட்டலில் உதவி கேட்டும் கிடைக்கவில்லை. மன வேதனையுடன் வீடு திரும்புகிறார். இதற்கிடையில் ஷ்யாம் அம்மா அப்பா தன் மகன் ஓதாரியாக சுத்துவதாகவும் திருமணம் செய்தால் திருந்துவன் என்றும் நண்பரிடம் கூறுகிறார். இவனால் தான் வீடு, இடம், தொழில் அனைத்தும் கைவிட்டு போனதாக பேசிக்கொள்கிறார்கள். சந்திரகலா கொதையை வீட்டில் பார்த்து கார்த்திக் மற்றும் வசுந்தரா செய்ததை சொல்ல. கோதை உடைந்து போகிறார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….