தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் கார்த்திக் கொதையிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். கார்த்திக் எந்த தப்பும் செய்யவில்லை என்று தமிழ் கூறுகிறார். கார்த்திக்கின் நண்பர்கள் இவனுக்கு தெரியாமல் செய்தது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என கூறுகிறார். பின் கோதையும் தன் மகன்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். இவை அனைத்தையும் சரஸ்வதி ஓரமாக நின்று பார்த்துக் கொண்டே இருக்கிறார். பின் அவர்கள் அனைவரும் கிளம்பியதும் தமிழ் தன் வண்டியை எடுக்கும்போது சரஸ்வதியை பார்க்கிறார். பார்த்து தன் அம்மாவிற்கு செய்த உதவிக்கு மிக்க நன்றி என கூறினார். பின் ஷ்யாம் நல்லவர் இல்லை எனவும் சரஸ்வதியிடம் கூறிசெல்கிறார்.அதற்கு சரஸ்வதி என்ன பதில் அழித்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…