தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் எப்போது துவங்கும்?
தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் துவங்கும் தேதியை அறிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் நவம்பர் 1 முதல் வழக்கம் போல இயங்க அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். ஆனால் வகுப்புகளுக்கு 20 பேர் என்ற விகிதத்தில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பள்ளிகள் முறையான கொரோனோ தடுப்பு செயல்பாடுகளை தினமும் கையாள வேண்டும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். குழந்தைகளுக்கு அதிகமாய் கொரோனோ தொற்று உறுதி செய்யப்படும் இந்த வேளையில் பள்ளி அவசியமா என்பது பல பெற்றோர்களின் கேள்வியாக இருக்கிறது.
இருந்தாலும் படித்ததை மறந்து வேறு வழிகளில் திசைமாறிக் கொண்டு இருக்கும் குழந்தைகளின் நிலையையும் யோசித்து பார்க்க வேண்டிய சூழலும் ஒரு பக்கம் இருப்பதால் மேலும் பள்ளியை திறக்க முடிவு செய்துள்ளாதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“ இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை உறுதி செய்யப்பட்ட தொற்றின் விகிதத்தில் 16 சதவிகிதம் பேர் பத்து வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது “