ஐபிஎல் 2021 | மும்பையை வென்றது டெல்லி அணி!
DC Win Against MI In 46th Match Of IPL 2021
ஐபிஎல் 2021-இன் 46 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றிருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. சூர்ய குமார் யாதவ் 33(26) தவிர யாரும் பெரிதாய் ஜொலிக்கவில்லை. டெல்லி சார்பில் ஆவேஷ் கான் மற்றும் அக்ஷர் படேல் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். அதற்கு பின் ஆடிய டெல்லி அணி ஓவர்களில் இலக்கை துரத்திப் பிடித்தது.
வளர்ந்து வரும் வீரராக அறியப்படும் டெல்லி அணியின் ஆவேஷ்கான் இந்த சீசனில் தொடர்ந்து கலக்கி வருகிறார். தென் ஆப்பிரிக்காவின் ஸ்டார் பவுலர் ரபாடா அவர்களாலே பெரிதாக எதுவும் செய்ய முடியாத பிட்சில் ஆவேஷ்கான் அதிரடியாக பந்து வீசி ரோஹிட், பாண்டியா உள்பட மும்பை அணியின் முக்கியமான மூன்று விக்கெடுக்களை கைப்பற்றி மும்பையை சிதறடித்தார்.
“ ஆட்டத்தின் முடிவில் ஹிட் மேன் அணியை, டெல்லி அணியின் சுட்டிக்குழந்தை அதன் கைவரிசைகளை மொத்தமாக களத்தில் காட்டி வென்று, புள்ளிப்பட்டியலில் அணியின் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது “