பிக்பாஸ் 5 தமிழ் | Day 4 | Review | ’எங்களுக்கு படிப்ப மட்டும் கொடுங்க’ – உருக வைத்த நமீதா
பிக்பாஸ் 5 தமிழின் நான்காவது நாளில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் யாவினையும் சிறு தொகுப்பாக இங்கு காண்போம்.
காலை 8 மணி, அனிருத் அவர்களின் ’காத்து வாங்குல ரெண்டு காதல்’ படத்தின் ‘Two Two Two Two Two Two Two Two Two Two, I Love You Too, Nejama I Love You Too’ என்ற சாங்குடன் இனிதே விடிகிறது பிக்பாஸ் ஹவுஸ்.
காலையிலயே நெத்தில ஒரு பட்டைய போட்டுகிட்டு, இங்கிட்டும் அங்கிட்டும் தெய்வ முகமாய் சுத்திட்டு திரியிறாரு அபிஷேக். நேரா பவ்னி ரெட்டிகிட்ட போய்ட்டு, அங்கயும் ஒரு ரிவ்யூவ ஆரம்பிச்சிடுறாரு. அதுக்கு அவங்களும் ஹவ் ஸ்வீட்ங்கிறாங்க. பேசாம ஒரு ஐஸ் வண்டிய கொடுத்துட்டு அபிஷேக்க ஹவுஸ்குள்ள ஐஸ் விக்க வச்சுடலாம் போல. ஒரு இடம் விடாம ரிவ்யூ ரிவ்யூனு சொல்லிட்டு எல்லாருக்கும் ஐஸ் வைக்கிறாப்ள. ஹ்ம்கும்… ப்ளே பாய்-ஆ இருப்பாருன்னு பாத்தா, ஐஸ் பாய்-ஆ இருக்காரு அபிஷேக். ’நீ அதுக்கு சரிபட்டு வர மாட்ட’ என்ற டையலாக் அபிஷேக்குக்கு கச்சிதமாய் பொருந்தும் போல.
அதற்கு பின் மீண்டும் ‘ஒரு கதை சொல்லட்டும்மா’ டாஸ்க் துவங்குகிறது. இந்த முறை ஐந்தாவதாக நமீதா அவர்கள் கதை சொல்ல அழைக்கப்படுகிறார். ஒரு திருநங்கையாக தான், தன் வீடு, தன் பெற்றோர், தன்னை சுற்றி இருக்கும் சமூகம், பள்ளி, கல்லூரி என்று எங்கிலும் அவர் அனுபவித்த இன்னல்களை கண்ணீர் வழிய வழிய எடுத்துரைக்கிறார். ஹவுஸ் முழுக்க அமைதி. அங்கு அவர் பேச பேச, மீதி 17 பேர்களின் கண்களில் இருந்து, அவர்களின் கண்ணீர் மட்டுமே பேசியது. அந்த கண் கேமராக்களுக்கு உணர்வுகள் இல்லை. இருந்திருந்தால் அதுவும் கூட அவரின் கதைக்காக ஒரு சொட்டு கண்ணீராவது சிந்தி இருக்கும். அத்தகைய உருக்கமான ஒரு வாழ்வியல் நமீதாவினுடையது.
நமீதா அவர்களை இவ்வளவு நேரம் பேச அனுமதித்ததிற்கு, சேனலுக்கும் ஒரு பெரிய நன்றி சொல்லியே ஆக வேண்டும். காரணம், பெரும்பாலும் இருபாலின தன்மை உடையவர்களின் வாழ்க்கை சீரழிவில் அவர்களின் பெற்றோர்கள் தான் முழு முதற் பங்கை வகிக்கிறார்கள் என்ற உண்மையை உடைத்து சொல்லியிருக்கிறார் நமீதா. இத்தனை இன்னல்களை கடந்து ஜெயித்து இருக்கும் நமீதா, நிச்சயம் மற்ற திருநங்கைகளுக்கு ஆகச்சிறந்த ஒரு முன்னுதாரணமாக இந்த பிக்பாஸ் காணொளியின் மூலம் உலகம் முழுக்க சென்றடைவார். கடைசியில் ‘எங்களுக்கு படிப்ப மட்டும் குடுங்க, நாங்களும் முன்னேறி காட்டுவோம்’ என்று கூறி, அவரைப் போன்று இருக்கும் அத்தனை பேரையும் முன்னிறுத்தி நம்பிக்கையாக சொல்லும் போது நம்மை நெகிழ வைக்கிறார்.
’பேச்சால தாக்குறாங்க, உடல் ரீதியா தாக்குறாங்க, வேற மாறி பாக்குறாங்க, பெத்தவங்களும் எங்கள தப்பு தப்பா பேசுறாங்க’, என்று சமூகத்தில் தனக்கும் தன்னை போன்றவர்களுக்கும் நடக்கும் இன்னல்களை ஒரு வாழ்வியல் போல சொல்லி வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் நமீதா. அவரின் ஒவ்வொரு வலி மிகுந்த வார்த்தைகளும் நிச்சயம் உலகம் முழுக்க போய் சேரும். அவரின் இந்த வலி மிகுந்த வரிகளுக்கும், உணர்வு பூர்வ கண்ணீருக்கும், ஹவுஸ் மேட்ஸ் 17 பேரும் 17 ஹார்ட்டுகளை அள்ளி விட்டனர். நாமாக இருந்தாலும் நிச்சயம் அதை தான் செய்திருப்போம்.
அதற்கு பின் டாஸ்க் காணொளிக்கு இடைவெளி விட்டு கேமரா அப்படியே லிவிங் ஏரியாக்கு வந்து நிக்குது. அங்க தான் ஒரு அதிர்ச்சியான ஒரு விஷயம், அபிஷேக் ராஜாவ மடில போட்டு மசாஜ் பண்ணி கொடுத்துட்டு இருக்காங்க பவ்னி ரெட்டி. இவ்ளோ சீக்கிரம் இந்த சீன்லா வரும்னு நினைச்சு கூட பாக்கல. ஆனா ’அக்கா, தம்பி மாறி பழகிக்குறாங்கனு பேசிக்கிறாய்ங்க’, ’யாரு பேசிக்கிறாய்ங்க…!’, ’யாரும் பேசல நாமலே அப்புடி பேசிப்போம்’ அதான் நல்லது. ‘ஏலே யார் மடி கிடைச்சாலும் படுத்துடுவ போலயே’ என்று போற போக்கில் அபிஷேக்கை கலாய்த்து விட்டு செல்கிறார் நம்ம இமான் அண்ணாச்சி.
இன்னொரு பக்கம் ஒரு லாரிக்கு மேக்கப் செட்களை அள்ளிட்டு வந்திருப்பாங்க போல அந்த பிரியங்கா. அது அவ்ளோத்தையும் விரிச்சு போட்டு பெட்ல உக்காந்து, மூஞ்சுல அப்பிக்கிட்டு இருக்காங்க, தாமரை பேசிக்கிட்டே, பிரியங்கா மேக்கப் போடுறத பக்கத்துல உக்காந்து பார்த்துகிட்டு இருக்காங்க, ’எதுக்கு ஒரு லாரிக்கு மேக்கப்ப அள்ளிட்டு வந்திருக்கன்னு’ மொத தாமர அக்கா பிரியங்கா கிட்ட கேட்டாங்க. இன்னொரு சைடு இமான் அண்ணாச்சி ஒளிப்பதிவுல, ராஜு-இயாக்கி நடிச்சு காமிச்ச ‘செருப்பு கட காதல்’ கான்சப்டு ‘ஹைய்யோ முடில’ என்ற அளவுக்கு இருந்திச்சு.
அதுக்கப்புறம் மறுபடியும் டாஸ்க் தொடங்குது. இப்ப கதை சொல்ல ஆரம்பிக்கிறது மதுமிதா. அவருக்கே உரித்தான இலங்கை தமிழில் கொஞ்சம் கொஞ்சம் இங்கிலீஸ் கலந்து பேசுகிறார். டிப்ரசன், பிடிக்காத விஷயங்களுக்குள்ள சிக்கி அனுபவிச்ச இன்னல்கள்னு ஒரு 5 நிமிடத்திற்கு உள்ளயே அவங்களோட கதை எல்லாத்தையும் சொல்லி முடிச்சிடுறாங்க. அதுக்கப்புறம் 15 லைக் 2 ஹார்ட்னு, ஹவுஸ்மேட் அவங்களோட கதைக்கு ரியாக்சன்ஸ் கொடுக்குறாங்க.
கடைசியா பவ்னி ரெட்டி ஏதோ அவங்களோட ஒரு பாஸ்ட்ல நடந்த விஷயத்த நெனச்சு அழுகுறாங்க, மதுமிதா அவங்கள தேத்துறாங்க, அபினய்க்கும் பவ்னி ரெட்டிக்கும் ஏதோ ஒரு பஞ்சாயத்து போல, அத அவங்களுக்குள்ளேயே பேசி முடிச்சு சமாதானமும் ஆகிக்கிறாங்க. அத்தோட எபிசோடும் முடிஞ்சிடுது.
’ ஹைலைட்ஸ் : இன்றைய எபிசோடு முழுக்க முழுக்க ஹைலைட்ஸ் நமீதா அவர்கள் மட்டுமே, எங்களுக்கு படிப்ப மட்டும் கொடுங்க என்று கெஞ்சல் தொனியில் அவர் கேட்கும் போது தெரிகிறது அவர்கள் ஆசைப்படும் அந்த படிப்பு, நமக்கெல்லாம் கிடைப்பது போல, அவர்களுக்கு அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை என்று, சமூகம் இதை உணர்ந்து ஒரு நல்ல படிக்கும் சூழலை அவர்களுக்கு உருவாக்கி கொடுத்தால், மக்கள் அவர்களை பார்க்கின்ற விதம் நிச்சயம் மாறும் என்பதில் ஐயமில்லை ‘