கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,390 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,390 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் 27 பேர் தமிழகத்தில் தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 35,734 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 1,487 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். புதிய தொற்றின் எண்ணிக்கை நேற்றைய தினத்தை விட குறைந்து இருக்கிறது. மீட்பு விகிதமும் தமிழகத்தில் வெகுவாக உயர்ந்து இருக்கிறது. ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 4.98 கோடியாக உயர்ந்திருக்கிறது.

“ தடுப்பூசி உபயோகம் அதிகரிக்க அதிகரிக்க, தொற்றினால் உண்டாகும் இறப்பு விகிதம் வெகுவாக குறையும். தமிழகம் இறப்பு விகிதத்தில் ஜீரோ என்ற நிலையை அடைய வேண்டுமெனில் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் “

About Author