பிக்பாஸ் 5 தமிழ் | Day 9 | Review | ’அவர் இறந்துட்டாருன்னு எனக்கு புரியாத வயசுலயே, என் அப்பா எங்கள விட்டு போயிட்டாரு’

Bigg Boss 5 Tamil Day 9 Review In Tamil

Bigg Boss 5 Tamil Day 9 Review In Tamil

பிக்பாஸ் 5 தமிழின் ஒன்பதாம் நாளிற்கு உரிய காட்சியமைப்புகளை சுவாரஸ்யம் மிகுத்தி வார்த்தைகளாக தொகுத்து இருக்கிறோம். கனிவுடன் வாசித்து மகிழ்ந்திடுங்கள்.

’ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே’ என்ற ’தளபதி’ பாடலுடன் இனிதே விடிகிறது ஒன்பதாம் நாள் பிக்பாஸ் இல்லம். தலைவர் தாமரைக்காகவே இந்த பாட்ட பிக்பாஸ் போட்டிருப்பாரோ ஹவுஸ்மேட்ஸ் மாறியே நமக்கும் டவுட் வர தான் செய்யுது. ‘அந்தா பெட் ரூம்ல நீயும் பிரியங்காவும் தூங்கி எந்திரிச்சு போர்வைய மடிக்காம அப்புடியே போட்டு வந்துட்டீக’ ன்னு தாமரை அக்கா ராஜூவ பார்த்து சொல்லுறாங்க. அதுக்கு ‘இந்தா இப்ப போய் மடிச்சிடுறேன்’ன்னு ராஜூ சொல்றாரு. ‘அதெல்லாம் வேணாம் நான் மடிச்சிட்டேன்’னு தாமரை அக்கா சொல்றாங்க. அதுக்கு கிண்டலா ராஜூ ஒன்னு சொல்ல ‘இந்தாரு உன்ன கொன்றுவேன்’னு தாமரை அக்கா நம்ம ஊரு ஸ்லேங்ல சொல்றப்போ, நம்ம அக்கா கூட நாம போடுற ஒரு குட்டி சண்டைய பார்த்த மாறியே இருந்துச்சு. இதுவே வேற ஹவுஸ் மேட்ஸ்சா இருந்தா போர்வைய கூட ஒழுங்கா மடிச்சு வைக்க மாட்டிக்கிறீங்கன்னு கம்பிளைண்ட் வந்திருக்கும். ஆனா தாமரை அக்கா வேற யாரோ மூடி படுத்ததும்னாலும் கூட அத மடிச்சு வச்சுட்டு வந்து அவங்ககிட்ட சொல்லுது பாருங்க. அய்யோ கிரேட் அக்கா நீங்க!

‘டிஸ்லைக் குடுத்தேன்னு பலூன உடைச்சிபுடுச்சே’ன்னு ராஜு, இயாக்கி பத்தி தாமரை அக்கா, மற்றும் நிரூப் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காரு, ‘ஏண்டா அந்த பொண்ணு சுறு சுறுப்பா தானடா சுத்திட்டு திரியுது அதுக்கு போய் ஏன் கொடுத்த’ன்னு தாமரை அக்கா சொல்ல, கதை சொன்ன விதம் பிடிக்கலக்கான்னு ராஜு சொல்லி முடிக்கிறாரு. போன ஜென்மத்துல கிறிஸ்டோபர் நோலன், ராஜுகிட்ட அசிஸ்டண்ட் டைரக்டரா இருந்திருப்பார் போல. கதை விஷயத்துல ரொம்ப எதிர்பார்க்குறாருப்பா. அப்புறம் பிரியங்கா லைட்டா அசதில கார்டன் ஏரியால இருக்குற ஷோபால படுத்து தூங்கிடுது. நாய் சத்தமா குரைக்க ஆரம்பிச்சிடுது. யார் அதுன்னு வெளில வந்து பாக்குற தாமரை அக்காகிட்ட ‘ஏதோ அசதியில் தூங்கி விட்டேன்’னு இம்சை அரசன் புலிகேசி மாறி பதில் சொல்லிட்டு இருக்காங்க பிரியங்கா. அப்புறம் ராஜுவோட எலிமினேசன் குமுறல் பாடல் செம்ம. வித்தைல்லா ஏதும் அவருட்ட இல்லன்னு நெனச்சேன். வச்சிருக்காரு வச்சிருக்காரு.

அதற்கு அப்புறம் மீண்டும் கதை சொல்லுற டாஸ்க் தொடங்குது. இந்த முறை அக்‌ஷாரா ரெட்டி அவங்களோட கதைய சொல்ல ஆரம்பிக்கிறாங்க. ’அப்பா ஐஐடி கோல்டு மெடலிஸ்ட், தனியா ஒரு கம்பெனி வச்சிருந்தாரு, ஹார்ட் ஸ்டோக்ல தீடீர்னு அவரோட இழப்பு, அவர் இறந்துட்டாருன்னு எனக்கு புரியாத வயசுல அவரு என்ன விட்டு போயிட்டாரு. என் மேல ரொம்ப பாசமா இருப்பாரு என்னோட முதல் ஹீரோ இன்னும் வரைக்கும் அப்பா தான்’, அப்புறம் அப்பாவோட நினைவு எனக்கு வர கூடாதுன்னே என் அண்ணா என்ன அவ்ளோ நல்லா பாத்துப்பான். என் சந்தோசத்துக்காக எதுவும் செய்வான். என் அண்ணா தான் என்னோட செகண்ட் ஹீரோ. அப்புறம் அம்மாவ பத்தி சொல்லனும்னா அவங்க ஒரு ஸ்ட்ராங்கஸ்ட் லேடின்னு சொல்லலாம். அவங்களோட 31 ஆவது வயசுல எங்கப்பா இறந்து போனாங்க. எல்லாரும் சொன்னாங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு. பட் எங்கம்மா எங்களுக்காக பண்ணிக்கல. மாடலிங்ல இண்ட்ரஸ்ட், அம்மாவோட திடீர் உடல் நிலை கோளாறு. இதையெல்லாம் கடந்து விரும்பிய துறைல ஜெயிச்சது. இதையெல்லாம் கடந்து இன்னும் ஒரு ரெககனிஷன் தேவைப்படுது. அதுனால பிக்பாஸ்குள்ள வந்திருக்கேன். இது தான் என்னோட குட்டி ஸ்டோரின்னு தன்னொட கதைய முடிக்கிறாங்க, அக்‌ஷாரா. அவங்க கதைக்கு 12 லைக், 1 ஹார்ட், 3 டிஸ்லைக் ஹவுஸ்மேட்ஸ் கொடுக்குறாங்க. பிரியங்கா, நிரூப், அபிஷேக் இந்த மூணு பேரும் தான் அந்த டிஸ்லைக் கொடுத்தவர்கள். ராஜு லைக் கொடுத்திருக்குறாருப்பா. அவருக்கு இந்த மாறி கதை தான் பிடிக்கும் போல. இது மாறி பார்த்து சொல்லுங்கப்பா. ராஜீ லைக் கொடுத்ததுல பிரியங்காவுக்கு மனஸ்தாபம் போல அவங்க வந்து விவகாரமா ராஜுகிட்ட கேள்வி கேட்டுட்டு நகர்ந்து போயிடுறாங்க.

இன்னொரு பக்கம் ராஜு, ’பெரிய கதாசிரியராகி கதை சொல்லுவாருன்னு பாத்தா, கம்பி கட்டுற கதையெல்லாம் அளந்து விட்டுட்டு, இதுக்கு தான் உனக்கு லைக் கொடுத்தேன்னு அக்‌ஷாராக்கிட்ட சொன்னாரு பாருங்க. பிக்பாஸ் சமஸ்தானமே ஆடி போயிடுச்சு’. பொதுவாவே எல்லாம் இருக்குறவங்ககிட்ட எந்த கஸ்டமும் இருக்காதுன்னு நினைக்கிறது தான் இந்த உலகம். என்கிட்ட எல்லாம் இருக்குன்னு இங்க யாருமே ஒத்துக்க மாட்டாங்க. அந்த வகைல என்கிட்ட எல்லாமே இருக்கு, நான் நெனச்சது எல்லாமே எப்பனாலும் எனக்கு கிடைக்கும். என்ன சுத்தி இருக்குறவங்க நான் நினைச்சமாறியே இருப்பாங்கன்னு அக்‌ஷாரா ஒத்துக்கிட்ட விதத்துக்காகவே அவங்கள நிச்சயம் பாராட்டலாம். ’நான் உங்கள மாறி கஸ்டத்தலாம் கடந்து வரல, எங்கப்பா இறந்த போ கூட நான் சமையல் ரூம்ல உக்காந்து சாப்டுட்டு இருந்தேன். எனக்கு எதுவும் புரியல. அப்பா வந்திருவாருன்னு நெனச்சிட்டு இருந்தேன்’னு சாதாரணமா அப்படியே நடந்தத சொல்றாங்க. எல்லாரு வாழ்க்கைலயும் கஸ்டம்னு ஒன்னு இருந்தே ஆகனும்னு அவசியமில்லையே. அவங்க ஏற்கனவே இருக்கிறது ஒரு கம்போர்ட் ஷோன் தான் ஆனாலும் அவங்களுக்கு இத தாண்டி ஒரு விஷயம் தேவைப்படுது. தேடுறாங்க அவ்ளோ தான்.

அதுக்கப்புறம் கதை சொல்ல வர்றாங்க நம்ம பிரியங்கா. பர்ஸ்ட் பெருசா ஒரு செல்ப் இண்ட்ரொடக்சன், அதுக்கு அப்புறம் இவ்ளோ ஜாலியான பொண்ணுக்குள்ள இப்புடி ஒரு சேட் ஸ்டோரி புதைஞ்சிருக்குமான்னு நாமலே நினைக்கிற அளவுக்கு, அவங்க அப்பாவோட இழப்பு பத்தி அவங்க சொன்ன அந்த கதை, அவங்களோட 11 வயசுலயே அவங்க அப்பாவ, அவங்க இழந்த விதம். அதெல்லாம் அவங்க கண்ணுல தண்ணி வராம ஒரு வித ஜாலி மூட்ல சொல்லி இருக்கலாம். ஆனா கேக்குற நமக்கு கண்ணீர் பொங்கி வந்திடுச்சு. அதுக்கப்புறம் அவங்க அம்மா அவங்களையும், அவங்களோட தம்பியையும் பாத்துக்கிட்ட விதம், அவங்க அம்மா அவங்களுக்கு கொடுத்த லவ், எந்த கஸ்டமும் தெரியாம வளர்த்த விதம்னு தன்னோட அம்மாவ பத்தி கொஞ்சம் ப்ரீபா சொல்றாங்க, எந்த ஒரு அம்பிசன், கோலும் இல்லாத ஒரு பொண்ணா தான் மீடியாக்குள்ள நுழைஞ்சது, இப்போ பிக்பாஸ்குள்ள நுழைஞ்சது எல்லாத்துக்குமே ஒரு ரீசன் தான், ’என்ன சுத்தி இருக்குற இடம் சந்தோசமா இருக்கனும், பாசிட்டிவிட்டியா இருக்கனும், என்னால முடிஞ்ச வரைக்கும் எல்லாரையும் கண்டிப்பா சந்தோசமா சிரிக்க வச்சுட்டே இருப்பேன்’னு சொல்லி அவங்க கதைய முடிக்கிறாங்க. ஏற்கனவே இங்க எல்லாரையுமே சிரிக்க வச்சிட்டீங்க பிரியங்கா. இதுக்கு முன்னாடியும் நீங்க எல்லா நிகழ்ச்சிலையுமே அப்புடித்தான் இருந்தீங்க. இனிமேலும் அப்புடித்தான் இருப்பீங்கன்னு நாங்க நம்புறோம். ஆனாலும் உங்க சிரிப்புக்கு பின்னாடி இருக்குற இந்த வலியான கதைய தெரிஞ்சிகிட்டது இப்போ தான். ஒட்டு மொத்தமா பிரியங்காக்கு 4 லைக், 8 ஹார்ட், 4 டிஸ்லைக் விழுது. அந்த 4 டிஸ்லைக்கர்ஸ் யாருன்னா ராஜூ, நிரூப், வருண், இயாக்கி, மோஸ்ட்லி எல்லாரும் சொன்ன காரணம் என்னன்னா நீங்க கோல் இல்லாம எதோ ஒரு அதிர்ஷ்டத்துல இந்த நிலைமைக்கு வந்திருக்கலாம், ஆனா எல்லாருக்கு அதிர்ஷ்டம் இருக்குமான்னு தெரியாதுல்ல, ஆல்சோ நீங்க ஜாலியா சொன்ன விதம் ஓகே, ஆனா இன்ஸ்பைர் பண்ணல அதுனால டிஸ்லைக் கொடுத்ததாகவும் சொல்லி இருக்காங்க. ஹ்ம்ம் கார்ணம் ஒகே தான். சரிதான்னு நாம ஒரு 60 பெர்சண்ட் ஒத்துக்கலாம்.

எப்போவும் பிரியங்கா சிரிக்கிறதையும், சிரிக்க வைக்கிறதையும் பார்த்தே பழக்கம் ஆன நமக்கு, அவங்களோட அம்மாவ நினைச்சு அழுகுற பாக்கும் போது கொஞ்சம் வருத்தமா தான் இருந்திச்சு. கதை சொன்னபோ கூட, அழுத்தமான இடத்துல அவங்க கண்ணு கலங்கல. ஆனா அதெல்லாம் விட்டு வெளில வந்து யோசிக்கிறப்போ கண்ணு கலங்கி இருக்கிறாங்க. எல்லாருமே அப்புடி தான்ல. நார்மலா நாம சாதாரணமா தான் இருப்போம். அப்போ நம்ம அம்மாவ பத்தி யாருகிட்டயாச்சு ’எங்கம்மா இப்புடி பண்ணுவாங்க, அப்புடி பண்னுவாங்க, எனக்குன்னா என்னனாலும் செய்வாங்க,ஆனா அவங்களுக்குன்னு ஒன்னும் எடுத்துக்கிட மாட்டாங்கன்னு’ சொல்லும் போது கண்ண தொட்டு பாருங்க, அது கண்டிப்பா கண்ணீர்ல மிதந்து கிட்டு இருக்கும். பொதுவாவே அது நம்ம எல்லார்கிட்டயும் இருக்குற ஒரு விஷயம் தான் அது தான் இன்னிக்கு ப்ரியங்காவையும் அழ வச்சிருக்கும்னு நம்புறோம்.

அடுத்ததாக சிபி அவரோட கதைய சொல்ல முன்வர்றாரு. ஸ்கூல் வரைக்கும் அம்மாஞ்சி, காலேஜ் போனதும் ‘ஏ மச்சான் கைய வச்சான், ஏ மச்சான் ஷாக்கு வச்சான்’ங்கிற மாறி ஒரு பொறுக்கின்னு, அவர அவரே பொறுக்கின்னு சொல்லிக்கிறாரு. இதுல என்ன பெருமையோ தெரில. சினிமா விருப்பம், ஷார்ட் பிலிம் அதுக்கப்புறம் கொஞ்ச நாள் யூ.கே டிராவல், மறுபடியும் இந்தியா ரிட்டன், மறுபடியும் சினிமா தேடல், ’வஞ்சகர் உலகம்’ படத்துல ஒரு வாய்ப்பு, அதுக்கப்புறம் நீண்ட இடைவெளி, பின்னர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் ’மாஸ்டர்’ படத்துல ஒரு வாய்ப்பு. சூர்யா சார் படத்துல வாய்ப்பு, இது எல்லாமே நான் என்ன பண்ணாலும் என்ன சப்போர்ட் பண்ணுற அப்பா, மனைவி, அதுக்கப்புறம் என்னோட ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் இவங்களால எனக்கு கிடைச்சது தான்னு சொல்லி முடிக்கிறாரு. ‘பண்ற வேலைய கரெக்டா பண்ணா, நமக்கு எங்கயாச்சு, எப்புடியாச்சு ஒரு வாய்ப்பு கிடைக்கும்’ அவரோட கதைல அவர் சொன்ன ஒரு உருப்படியான கருத்து இது மட்டும் தான்னு நினைக்கிறேன். ஒட்டு மொத்தமா 6 லைக், 3 ஹார்ட், 7 டிஸ்லைக் வாங்குறாரு சிபி. அந்த 7 டிஸ்லைக் போட்ட யாரும் காரணம் சொல்ல தேவையில்லன்னு நினைக்கிறேன். அந்த காரணம் ஆடியன்ஸ்சுக்கே, அவரோட கதை மூலமா ஆட்டோமேட்டிக்கா போய் சேர்ந்திருக்கும்.

கடைசியா,அக்‌ஷாரா அவங்களோட தாமரை பத்தின புரிதல ஓப்பன் அப் பண்ணுறாங்க, நேரடியா தாமரை கிட்டவே, அது கொஞ்ச நேரம் நீளுது. கடைசியா தாமரை பத்தின புரிதலுக்கு வந்துறாங்க அக்‌ஷாரா. அதோட இந்த பிக்பாஸ் 5 தமிழின் ஒன்பதாம் நாளுக்கு உரிய எபிசோடும் முடியுது.

”ஹைலைட்ஸ் : பிரியங்காவின் ஜாலியான கதை, அக்‌ஷாராவின் கேஸ்சுவலான கதை, சிபியின் முரட்டு தனமான கதைன்னு, மொத்தம் மூனு கதை, நாலாவதா ராஜூ, அக்‌ஷாரா கிட்ட சொன்ன அந்த கம்பி கட்டுற கதை, அதையும் கதை லிஸ்ட்ல சேர்த்துப்போமே பாவம் ஸ்கிரிப்ட் ரைட்டர்ல பீல் பண்ணிட போறாரு. ஓவர் ஆல் ஒரு ஓகே எபிசோடு தான்”





About Author