தமிழகத்தில் ஒரே நாளில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கும் புதிய தொற்றின் விகிதம்!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,539 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தொற்றின் விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகம். மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தொற்றுக்கு 39 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,853 ஆக உயர்ந்துள்ளது.
இது போக இன்று ஒரு நாளில் மட்டும் 2,891 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இன்று தான் தமிழகம் கூடுதல் தளர்வுகளை அறிவித்திருந்த நிலையில் தொற்றின் விகிதம் மீண்டும் உயர்ந்திருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. நர்சரி பள்ளிகள் திறப்பதற்கும் அரசு அனுமதி அளித்துள்ள இந்த நிலையில் மீண்டும் உயர்ந்திருக்கும் கொரோனோ தொற்று பெற்றோர்களிடையே அச்சத்தை எழுப்பி உள்ளது.
“ இந்த திடீர் தொற்றின் உயர்வு மூன்றாம் அலையை குறிக்கிறதா? அவ்வாறெனில் அளிக்கப்பட்ட தளர்வுகள் அரசினால் திரும்ப பெறப்படுமா? பள்ளிகள் மறுபடியும் மூடப்படுமா? என்ற பல்வேறு கேள்விகளை முன் வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள் “