Tamizhum Saraswathiyum Today Episode | 15.10.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தன் மருமகளுக்கு தன்னால் தாலியை உருக்கும் சடங்கிற்கு கலந்து கொள்ளமுடியவில்லை என வருத்தத்தில் இருந்தார் கோதை. பின் அனைவருமm சமாதானாபடுத்தி அடுத்து பத்திரிக்கை எழுதுவதற்கு ஆரம்பித்தனர். பத்திரிக்கையில் யார் பெயரையும் குறிப்பிட வேண்டாம் இதனால் மணசங்கடங்கள் வரும் என கூறினார் கோதை. ஆனால் அதை சந்திரகலா, ஏன் எங்கள் குடும்பத்தில் உள்ள அளவுக்கு உங்கள் குடும்பத்தில் பெரிய ஆட்கள் இல்லையென்றால் வேணாம் என குத்தலாக பேசினார். இதனால் வேறு வழி இன்றி கோதையும் பெயர் போட ஒத்துக்கொண்டார். சற்று நேரத்தில் சந்திரகலாவின் அண்ணன் தன் பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கோபங்கொண்டு கிளம்பினார். அதே போல் மற்றவர்களும் அவ்வாறே கிளம்பினார். இதனால் வேறு வழி இன்றி கோதை சொன்னபடியே சுற்றமும் நட்பும் என எழுதினால் போதும் என்று கூறினார். பின் வீட்டிற்க்கு வந்ததும் கோதை நடந்ததை நினைத்து மிகவும் வருந்தினார். ஆனால் சற்று நேரத்தில் வசுந்தரா தொலைபேசியில் அழைத்து கோதையுடன் பேசி சமாதானம் செய்தார். சரஸ்வதி வீட்டில் தமிழை அழைத்து நன்றி சொல்ல வேண்டும் என்று பாட்டியின் தூண்டுதலால் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author