ஐபிஎல் 2021 | Final | அதிரடி காட்டிய சென்னை அரண்டு போன கொல்கத்தா!
IPL 2021 Final CSK Set A Total 193 To KKR
ஐபிஎல் 2021-இன் பைனலில் கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய சென்னை 192 ரன்களை எடுத்துள்ளது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி, சென்னையை பேட்டிங் செய்ய பணித்தது. வந்தவர்கள் போனவர்கள் என்று அனைவரும் அதிரடி காட்டியதால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 192 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 7 போர்கள் மற்றும் 3 சிக்ஸ்களுடன் டியூ பிளசிஸ் 86(59) ரன்கள் எடுத்தார்.
கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் நான்கு ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். ஒரு அதிரடியான சேஸ் காத்திருக்கிறது. பிபி மாத்திரை உபயோகிப்பவர்கள் கையில் தண்ணீரும் ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு மாத்திரையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
“ சென்னையா கொல்கத்தாவா, 193 ரன்கள் இலக்கு, யார் வெற்றி பெறுவார்கள், கோப்பையை கைப்பற்றுவார்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் “