தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தான் திட்டப்படியே தாலி உருக்கும் விஷேஷத்தில் கோதை இல்லாமல் நடந்தாலும், மீண்டும் கோவமாக தான் இருக்கிறார். தன் கூடவே இருந்த சொந்தங்கள் தன்னை கோதை முன் அவமான படுத்தி சென்றுவிட்டதாக கூறினார். அதற்கு கலாவும் சமாதானம் செய்து வைத்தார். சரஸ்வதி தமிழுக்கு தொலைபேசியில் அழைத்து விசேஷம் நல்லபடியாக முடிந்ததா என விசாரித்தார். அவரும் நடந்தது முடிந்ததை கூறினார். பின் தன் வீட்டிற்க்கு மதிய விருந்துக்கு வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அப்பாவே இதற்கு சம்மதித்து அழைத்தார் கண்டிப்பாக வர வேண்டும் என்று சரஸ்வதி கூறினார். அவரும் சம்மதித்தார். பின் தானே எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்தார் சரஸ்வதி. இதை பார்த்த சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் ஒன்றும் புரியாமல் நின்றனர். தமிழுக்காக எதற்காக பார்த்து பார்த்து செய்கிறாள் என்று ஒருவருக்கு ஒருவர் கேட்டுக்கொண்டனர். பின் தமிழ் நமச்சி இருவரும் சாப்பிட்டு முடித்தனர். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..