பிக்பாஸ் 5 தமிழ் | Day 15 | Review | ‘ராஜூ ஜெயிக்கவே கூடாது என்ற நினைப்பில், உள்ளேயும் வெளியேயும் தோற்றுக் கொண்டு இருக்கிறார் அபிஷேக்’

Bigg Boss 5 Tamil Day 15 Review

Bigg Boss 5 Tamil Day 15 Review

பிக்பாஸ் 5 தமிழின் பதினைந்தாம் நாளிற்கு உரிய காட்சிகள், சற்றே சுவாரஸ்யம் கூட்டி, எழுத்துக்களின் வடிவில் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. படித்து காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள்.

’இந்தியா கேட்-டு, எங்களுக்கு எல்ஐசி வெயிட்டு, உங்களுக்கு கோவா தான் பீச்சு, எங்களுக்கு மெரினா தான் மாஸ்சு’ என்ற ஹிப் ஹாப் ஆதியின் கனீர் குரலுடனும், ஹவுஸ்மேட்டின் தாறுமாறு நடனத்துடனும் இனிதே விடிகிறது பிக்பாஸ் இல்லம். காணாமல் போனவர்கள் லிஸ்ட்டில் வருணும் வந்திருக்க கூடும் போல. அக்‌ஷாரா தான் முன்வந்து அபிஷேக், பவ்னி குழுவிடம் ஒரு சில கதைகளை விட்டு வருணை காப்பாற்றியதாக தெரிகிறது. இதையெல்லாம் வருணிடம் கூறி ’நீ கொஞ்சம் ஜாஸ்தி பேசு, இல்லன்னா ஏதாச்சி பண்ணி தொல, ஓபன் அப் ஆகு’ என்று வருணுக்கு அறிவுரைகளை அள்ளி தெளிக்கிறார் அக்‌ஷாரா. ’தொறடா, வாயத் தொறடா’ என்பது போல இருக்கிறது வருணுக்கு அக்‌ஷாரா சொல்லும் அட்வைஸ். ராஜூ பாய, அக்‌ஷாரா அண்ணானு சொன்னதுக்கு பின்னாடி, இந்த வருண் காரணமா இருப்பாரோ? பாப்போம் என்ன நடக்குதுன்னு!

நேத்து பவ்னி-அபிஷேக் இடைல நடந்த குட்டி வேண்டா விவாதம், அத இன்னிக்கு பேசி சரி பண்ணி சமாதானம் ஆகிக்கிறாங்க. அபிஷேக்குக்கு கட்டிபிடி வைத்தியம்னா பிடிக்கும் போல. அந்த பவ்னி தடுக்க முற்பட்டாலும் வான்டடா போய் கட்டிபிட்டிச்சிக்கிறாரு. கட்டிப்பிடிச்சு தான் சமாதானம் ஆகனுமா அபிஷேக்?. அந்த பவ்னியை, அபிஷேக் கொஞ்சி கட்டி அணைக்கும் போதெல்லாம் பவ்னி ஆர்மிகளுக்கு ’எரியுதுடி மாலா’ என்பது போலவே இருக்கிறது. அடுத்ததாக பிக்பாஸ்சிடம் இருந்து ஒரு அறிவிப்பு வருகிறது, பிக்பாஸ் விதிமுறைகளுக்கு உட்பட்டு, ‘கதை சொல்லட்டுமா’ டாஸ்க்கின் போது, ஆக்டிவிட்டி ஏரியாவிற்குள் நுழைய, முன்னதாகவே வந்து காத்திருந்தவர்கள் என்பதின் பேரில், நான்கு பேர் அடுத்த தலைவர் போட்டிக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். அதில் இசை வாணி, சிபி, பவ்னி, ராஜூ உள்ளிட்டவர்கள் அடங்குவர். அது போக கூட்டத்தில் ஜொலித்தவரான அண்ணாச்சியும் அந்த தலைவர் பதவிக்கான டாஸ்க்கில் சேர்க்கப்படுவதாக பிக்பாஸ் அறிவிக்கிறார். என்ன டாஸ்க் என்பது எப்போதும் போல பிக்பாஸ் ஓலையில் வருகிறது. அதை எடுத்து இயாக்கி வாசிக்கிறார். ‘என்னா பீலீங்கு’ என்பதே டாஸ்க்கின் தலைப்பு. தலைவர் பதவிக்கான ஐந்து போட்டியாளர்கள் தனி தனியாக கார்டனில் நிற்க வேண்டும். பஸ்சர் அடித்தவுடன் மிச்சமுள்ள ஹவுஸ்மேட்ஸ், குழுவாக அல்லது தனியாகவோ, யாரை முதலில் தலைவர் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்களின் அருகில் சென்று, அவர்களுடைய ஏதாவது ஒரு உணர்ச்சியை கிளர வேண்டும். அது கோபமாகவோ, சிர்ப்பாகவோ, கண்ணீராகவோ எதுவாகவோ வேண்டுமானாலும் இருக்கலாம்.

இப்படி ஒவ்வொரு பஸ்சருக்கும் ஹவுஸ்மேட்ஸ், ஐவருள் ஒவ்வொருவரையாக டார்கெட் செய்து அவர்களின் உணர்வுகளை கிளர வேண்டும். கடைசி வரை யார் தனது உணர்ச்சியை காட்டாமலே நிற்கிறார்களோ அவரே இந்த டாஸ்க்கின் வின்னர் மற்றும் இந்த வாரத்திற்கான இல்லத்தின் தலைவர் என்றும் அறிவிக்கப்படுவார். இதுவே அந்த ஓலைச்சுவடியில் இருந்த டாஸ்க் மற்றும் டாஸ்க்கிற்கான விதிமுறைகள் என்று வாசித்து முடிக்கிறார் இயாக்கி. முதல் பஸ்சர் அடிக்கிறது முதலில் அண்ணாச்சியை டார்கெட் செய்கிறார்கள் மீதமுள்ள குழு. அவரின் பாணியிலேயே பேசி, அவரை ஒட்டு மொத்த குழுவும் சேர்ந்து சிரிக்க வைக்க முயற்சிக்கும் போது, தாமரை ‘நான் போ மாட்டேன்’ என்ற ஒற்றை வார்த்தையை கூறி அண்ணாச்சியை சிரிக்க வைத்து விடுகிறார். அண்ணாச்சியும் சிரிப்பை வெளிப்படுத்தி முதல் ஆளாக தலைவர் போட்டியில் இருந்து வெளியேறுகிறார். அடுத்த பஸ்சர் அடிக்கிறது. அனைவரும் ராஜூவை டார்கெட் செய்கின்றனர். அபிஷேக்கின் மூக்கு காமெடி, பிரியங்கா அண்ணாச்சிக்கு போட்ட அதே சூடு சொரண இல்ல காமெடி, கத்தல், கதறல்னு எல்லாம் போட்டு பாத்தும் எதுக்கும் அசரல ராஜூ, ஒரு வழியா டைமும் முடிஞ்சிடுது. அடுத்த பஸ்சர் அடிக்குது. பவ்னிய டார்கெட் பண்ண ஆரம்பிக்கிறாங்க, ’சாங்கு, லவ் பண்றியா, ஒன்றரை கோடி ஹைதராபாத் வீட்ட தர்றியான்னு’ பல வார்த்தைகள் போட்டு பாத்தும் பவ்னியும் அசைவு கொடுக்கல, அதோட டைமும் முடிஞ்சிடுது. அடுத்த பஸ்சர் அடிக்குது, இந்த டைம் சிபி தான் டார்கெட், பாட்டு, கவுன்டர்னு பல வித்தைகள் போட்டும், அவரும் டைம் முடியுற வரைக்கும் எந்த அசைவும் கொடுக்கல.

அடுத்த பஸ்சர் அடிக்கிறது. இந்த முறை இசைவாணி டார்கெட் செய்யப்படுகிறார். ’முட்ட கண்ணி, ஒருத்தன் பால் குடுக்கலன்னு, அவனுக்கு கமல் சார் முன்னாடி பாலே ஊத்திட்டியேடி’ என்ற பல கவுன்டர்களுக்கு இசையும் நேரம் முடியும் வரை அசைவு கொடுக்கவில்லை, முதல் ரவுண்டில் ஹவுஸ்மேட்ஸ், ஐந்து தலைவர் போட்டியாளர்களை சிரிக்க வைக்க முற்பட்டு அதில் ஒன்றில் மட்டும் வெற்றி கண்டனர். அடுத்ததாக மறுபடியும் பஸ்சர் அடிக்கிறது. இரண்டாவது ரவுண்ட் ஸ்டார்ட் ஆகிறது. இந்த முறை முதல் தடவையாக ராஜூவை டார்கெட் செய்கிறார்கள், அபிஷேக்கும், நிரூப்பும் பெண்களின் உடைகளை அணிந்து வந்து பெண்ணிய வார்த்தைகள், அசைவுகள் மூலம் ராஜூவை சிரிக்க வைக்க முற்பட்டு கடைசி நிமிடம் வரை முடியாமல் தோற்றுப்போகினர். சின்ன பொண்ணு அம்மா மற்றும் பிரியங்காவின் பெர்மாமன்சும் ராஜூவிற்கு முன்னால் நிலைக்கவில்லை. அத்தோடு டைமும் முடிகிறது. அடுத்த பஸ்சர் அடிக்கிறது. இந்த முறை இசை வாணியை டார்கெட் செய்கின்றனர். ராஜூவிக்கு உபயோகித்த அதே பெண்ணிய பாவனைகள் பண்ணிப்பார்க்கிறார்கள். எடுபடவில்லை என்றதும் அபிஷேக்கும், வருணும் இசை சொன்ன கதையை கையில் எடுக்கின்றனர். ‘ சின்ன வயசுலேருந்து கஸ்டப்பட்டதெல்லாம் போதாதா, ஒரு ட்ரெஸ் வாங்குறதுக்கு எவ்ளோ கஸ்டப்பட்டு இருக்கேன் தெரியுமா’ என்று அபிஷேக்கும் வருணும், இசையின் வலிகளுக்குள் நுழையும் போது அதை அண்ணாச்சி தடுக்க முயற்சிக்கிறார். பிரியங்கா, சுருதி, வருண், அபிஷேக் உள்ளிட்டோர் ’அவள் சொன்னதை அவளுக்கு அப்படியே நியாபகம் தான் படுத்துகிறோம்’ என்று எதிர்விவாதம் வைக்கிறார்கள் அதற்குள் நேரம் முடிகிறது.

வீட்டின் உள்ளுக்குள் வந்து அண்ணாச்சி ’சண்டை போடுவது போல ஒரு சீரியஸ்னஸ் கிரியேட் செய்து, அவள் (இசை) முகத்தினுள் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடலாம் என்று நினைத்தேன், அதற்குள் டைம் முடிந்து விட்டது’ என்று பிரியங்காவிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். அதற்குள் ’முந்திரிக் கொட்டை’ என்பார்களே அது போல முந்திக் கொண்டு வந்து அண்ணாச்சியிடம் சண்டை புரிய ஆரம்பித்தார் அபிஷேக். வாக்கு வாதம் முற்றும் போதே அடுத்த பஸ்சர் அடிக்கிறது. மறுபடியும் அதே சூட்டோடு அதே டாப்பிக்கோடு சண்டையை தொடர்ந்து சீரியஸ்னஸ் கிரியேட் செய்த போதும், இசை போலவே பவ்னியும் அசைவு கொடுக்கவில்லை. நேரமும் முடிந்தது. அபிஷேக் நடப்பது என்னவென்றே புரியாமல் அடுத்த பஸ்சர் அடிக்கும் வரை ஒரு பக்கம் கத்திக் கொண்டே இருக்கிறார். சைடு கேப்பில் அபினய், கத்தி பயமுறுத்தி இசை வாணியை பய உணர்வை வெளிப்படுத்த வைக்கிறார். அத்தோடு தலைவர் போட்டியில் இருந்து இசையும் வெளியேற்றப் படுகிறார். தற்போது சிபி, ராஜூ, பவ்னி என மூவரும் மிச்சம் இருக்கின்றனர். அதற்கு அப்புறம் கேமில் புது ட்விஸ்ட் ஒன்றை வைக்கிறார் பிக்பாஸ். அது பெருசா ட்விஸ்ட் ஒன்னும் இல்ல. ஸ்டோர் ரூம்ல மாலைகள் இருக்கும், முதல் பஸ்சர் அடிக்கும் போது அத மிச்சம் உள்ள 13 போட்டியாளர்களும் எடுக்கனும், இரண்டாவது பஸ்சர் அடிக்கும் போது யார் தலைவர் ஆகனும்னு போட்டியாளர்கள் அவங்களோட வியூல இருந்து நினைக்கிறாங்களோ அவங்களுக்கு அந்த மாலைய போடனும். அவ்ளோ தான்.

இத பிக்பாஸ் அறிவிச்சதுமே, எல்லாரும் ராஜூவுக்கு மாலைய போட்டுடுவாங்களோன்னு வயித்தெரிச்சல்ல, ’சிபி ஆன் டைம் இருப்பான், பவ்னி போன வாரம் புல்லா சமையல் டீம்ல இருந்து டயர்டா இருக்கா, ராஜுக்கு இதுலலா விருப்பம் இல்ல அவனோட அட்டேன்சனே வேறன்னு’, ராஜூவ கலட்டி விட்டுட்டு, சிபிக்கு கொடுக்கலாம்ங்கிற மாறி, அவரோட வயித்தெரிச்சல் கலந்த அந்த பாயின்ட் ஆப் வியூவ, மத்தவங்கட்டையும் சொல்லி கதறி கிட்டு இருக்காரு தொலை நோக்கு பார்வையாளர் அபிஷேக். பஸ்சர் அடிக்குது, எல்லாரும் ஆளுக்கு ஒவ்வொரு மாலைய எடுத்துக்கிட்டு கார்டன நோக்கி போறாங்க, அபிஷேக்கோட வயித்தெரிச்சல் ஹவுஸ்மேட்ஸ் எல்லாத்தையும் பாதிச்சிருக்கா, இல்ல அவங்களுக்கும் ராஜூ மேல ஒரு வயித்தெரிச்சல் இருக்கான்னு தெரில, பர்ஸ்ட் ராஜுவுக்கு மாலை போட்டவங்களும் அத கொஞ்ச நேரத்துலயே, கலட்டி எடுத்துக் கொண்டு போய், சிபிக்கும்(6), பவ்னிக்கும்(6) சமமா போட்டு விட்டாங்க, ராஜூ தலைவரா வரக்கூடாதுன்னு ஒட்டு மொத்த ஹவுஸ்சும் நினைக்கிறாங்க போல, கடைசில ராஜு கழுத்துல கிடந்தது ஒரே மாலை. உடனே சிபி தான் தலைவர் ஆக போறார்னு எல்லாரும் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. முக்கியமா, அபிஷேக் கத்தி கத்தி கொண்டாடுனாரு. அவருக்கு சிபி தலைவர் ஆக போறாருன்னு சந்தோசம்லா இல்ல. ராஜூவ தலைவரா ஆக விடாம தடுத்துட்டோம்னு அவ்ளோ சந்தோசம். ’அடுத்த ரவுண்ட், டை பிரேக்கர் முறையில், சிபிக்கும் பவ்னிக்கும் இடையில் நடக்கும்னு அதுல ராஜூ கலந்துகிட்டு ராஜூ கழுத்துல உள்ள மாலைய யாருக்காச்சு போடனும்னு அறிவிக்கிறாரு’ பிக்பாஸ். பஸ்சர் அடிக்குது, ராஜூ நேரா போய் அந்த மாலைய சிபி கழுத்துலயே போட்டுறாரு, பிக்பாஸ்சும் இந்த வார தலைவரா சிபிய அறிவிக்கிறாரு. ’ஒருத்தருக்கு வன்மம் இருக்கலாம். ஆனா அபிஷேக் அளவுக்கு இருக்க கூடாது’ என்ற சிந்தனையே, இந்த நிகழ்வுக்கு பின்னர் மனதில் தோன்றுகின்ற ஒன்றாக இருக்கிறது.

எதையுமே பெரிதாக எடுத்துக் கொள்ளாத ராஜூ, இதையும் இந்த நிகழ்வையும் கூட பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உள்ளே சென்று எப்போதும் போல, எல்லோரிடமும், நார்மலாக கேம் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். அடுத்ததாக கேப்டனின் டீம் செலக்சன் நடைபெறுகிறது, சமையல் டீம், ஹவுஸ் க்ளினீங் டீம், டாய்லெட் க்ளினீங், வெஷல் வாசிங் டீம்களுக்கு ஆட்கள் தலைவரின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அத்தோடு அந்த காட்சி அகலுகிறது. சமையல் டீம்-யில் இதுவரை இருக்கும் குறைகளை அண்ணாச்சி பவ்னியிடம் எடுத்துரைக்க முயலும் போது, அதை கேட்க கூட பொறுமை இல்லாதவராய் இருக்கிறார் பவ்னி. அண்ணா அத டீம்ட்ட சொல்லுங்கண்ணா’ என்று பவ்னி சொல்ல ‘நீயும் டீம்ல ஒருத்தி தானம்மா’ன்னு அண்ணாச்சி சொல்ல ‘போதும்னா, ஒவ்வொருத்தரா ஒன்னு ஒன்னா சொல்லி எரிச்சலா இருக்கு’ என்று ஆதங்கமான பதில் ஒன்றை வெளிப்படுத்துகிறார் பவ்னி. அந்த காட்சி மறைந்து அதற்கு பின் நாமினேசனை அறிவிக்கிறார். வழக்கம் போல தலைவரை (சிபி) யாரும் தேர்ந்தெடுக்க இயலாது.

அக்‌ஷாரா :

முதல் நாமினேசன்: அபிஷேக், காரணம் சின்ன பொண்ணு அம்மாவிடம் அவர் செய்த வாக்கு வாதம்
இரண்டாம் நாமினேசன்: பவ்னி, காரணம் தேவையில்லா கோபம்

நிரூப்:

முதல் நாமினேசன்: அக்‌ஷாரா, காரணம் தேவையில்லாமல் நிறைய பிரச்சினைகளில் இருப்பது
இரண்டாம் நாமினேசன்: தாமரை, காரணம் தலைவர் பதவியை ஒழுங்காக செய்ய தவறியது

அண்ணாச்சி:

முதல் நாமினேசன்: இசை, காரணம் நல்லது சொல்ல போனால் புரிதல் இல்லை
இரண்டாம் நாமினேசன்: பவ்னி, இசைக்கு சொன்ன அதே காரணம்

பவ்னி:

முதல் நாமினேசன்: அக்‌ஷாரா, காரணம் டாஸ்க்ல ரூல் பிரேக்
இரண்டாம் நாமினேசன்: அபிஷேக், காரணம் முன்னாடி ஒன்னு பின்னாடி ஒன்னு பேசும் குணம்

வருண்:

முதல் நாமினேசன்: நிரூப், காரணம் கேப்டன்சிப் டாஸ்க்ல அவரு வரக்கூடாதுன்னு நாங்களாம் நினைச்சிக்கிட்டதா அவரே நினைச்சுக்கிட்டாரு, அந்த புரிதல் இல்லாமைக்காக
இரண்டாம் நாமினேசன்: அபிஷேக், காரணம் அவர்கள் (அபிஷேக் குழு) மட்டும் தெரிய வேண்டும் பேச வேண்டும் என்று நினைப்பது

பிரியங்கா:

முதல் நாமினேசன்: சின்ன பொண்ணு அம்மா, காரணம் இன்வால்மென்ட் இல்ல
இரண்டாம் நாமினேசன்: சுருதி, காரணம் கருத்துக்களை உடனடியா சொல்வதில்லை

அபிஷேக்:

முதல் நாமினேசன்: அக்‌ஷாரா, காரணம் டாஸ்க்ல இன்பர்மேசன் இல்லீகலா லீக் பண்ணது
இரண்டாம் நாமினேசன்: சின்ன பொண்ணு அம்மா, காரணம் நாடகத்தில் செய்த குளறுபடி.

இயாக்கி:

முதல் நாமினேசன்: பிரியங்கா, காரணம் மத்தவங்களோட டிசிசன்ஸ்ல இன்புளுயன்ஸ் பண்றாங்க,
இரண்டாம் நாமினேசன்: அபிஷேக், காரணம் பிரியங்காவிற்கு சொன்ன அதே காரணம்

தாமரை:

முதல் நாமினேசன்: பவ்னி, காரணம் ஏதேனும் சொல்லும் போது எகத்தாளம் காட்டுவது
இரண்டாம் நாமினேசன்: அபினய், காரணம் பேசுவதையே கண்டு கொள்வதில்லை

இசைவாணி:

முதல் நாமினேசன்: அபினய், காரணம் ரெண்டு டாஸ்க்லையும் (பலூன், உணர்ச்சி வெளிப்பாடு) என்னை தோற்கடித்தது அபினய்
இரண்டாம் நாமினேசன்: பிரியங்கா, காரணம் அவங்க என்ன பண்றாங்கன்னே புரில

சுருதி:

முதல் நாமினேசன்: அண்ணாச்சி, காரணம் என்கிட்ட நடந்துக்குறதுல்ல வித்தியாசம் இருக்கு
இரண்டாம் நாமினேசன்: இயாக்கி, காரணம் திடீர் மாற்றம்

சின்ன பொண்ணு:

முதல் நாமினேசன்: அபிஷேக், காரணம் பேசிக் கொண்டு இருப்பவர் நான் சென்றால் அமைதி காக்கிறார்
இரண்டாம் நாமினேசன்: பவ்னி, காரணம் பேச முயல்வதில்லை

ராஜு:

முதல் நாமினேசன்: சின்ன பொண்ணு, காரணம் நாடகத்தில் ஏற்படுத்திய குளறுபடி
இரண்டாம் நாமினேசன்: பவ்னி, காரணம் போன வாரம், நான் பவ்னி என்றால் இப்படி தான் என்று நினைத்த பவ்னி, தற்போது இல்லை, (அது எங்களுக்கும் தான் இல்ல ராஜூ)

(அடப்பாவி அப்ப நீ பிரியங்காவ நாமினேட் பண்ணலயா,கன்பசன் ரூம்க்கு வெளில வந்து ‘மேடம் பிரியங்கா…. தேஷ்பாண்டே… ஆஹ்ன்’னு புரோமோல சொன்னபோ பிரியங்காவ தான் நாமினேட் பண்ணுவாரோ ராஜுன்னு நெனைச்சோம்.)

மதுமிதா:

முதல் நாமினேசன்: தாமரை, காரணம் பேசுவது Uncomfortable
இரண்டாம் நாமினேசன்: இயாக்கி, காரணம் இரண்டு முகம் வைத்து விளையாடுவது போல தெரிகிறது.

அபினய்:

முதல் நாமினேசன்: இசைவாணி, காரணம் அவங்களாகவே ஒட்டிக்கொள்ள கஸ்டப்படுகிறார்
இரண்டாம் நாமினேசன்: தாமரை, காரணம் கேப்டன்சிப் ஒழுங்காக செய்யவில்லை

சிபி:

முதல் நாமினேசன்: அபிஷேக், காரணம் அபிஷேக்-பிரியங்கா குரூப்பிசம் இருக்குற மாறி இருக்கு
(போச்சா அபிஷேக், நீ பாத்து தலைவனா ஆக்குனவரே, உங்கள கும்மாங் குத்து குத்திட்டாரா)
இரண்டாம் நாமினேசன்: பிரியங்கா, காரணம் அபிஷேக்குக்கு சொன்ன அதே காரணம் குருப்பீசம்

ஓரு வழியாக நாமினேசன் முடிந்தது.

வெளியேற்றப் பட்டியலில் இடம் பெற்றவர்கள் : அபிஷேக்(6), பவ்னி(5), அக்‌ஷாரா(3), சின்ன பொண்ணு(3), பிரியங்கா(3), தாமரை(3), இயாக்கி(2), இசை(2), அபினய்(2)

வெளியேற்றப்பட்டியலில் இடம் பெறாதவர்கள்: ராஜூ, வருண், சுருதி, மதுமிதா, சிபி (தலைவர்)

ரூல்களை உடைப்பதாக நாமினேசனுக்கு காரணம் சொல்லி விட்டு, அபிஷேக் ஒவ்வொருவரிடமாக சென்று ’நீ யாரச் சொன்ன நீ யாரச் சொன்ன’ என்று கேட்டு மல்லுக் கட்டிக் கொண்டு இருக்கிறார். ராஜூவிடம் அபிஷேக் கேட்ட போது அவர் ’சொல்வதாயில்லை. வெளியில் சொல்ல கூடாது என்று ரூல்ஸ் இருப்பதாக’ அபிஷேக்கிடம் முறையிட்டார். அதற்கு பின் கொஞ்ச நேரம் ராஜூவின் சென்சிபிலான காமெடி நீளுகிறது. என்ன சொன்னாலும் தவறாக புரிந்து கொள்ளும் பவ்னியிடம் நாம் பேசாமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்து விடுகிறார் ராஜு. வீட்டில் இருவர் பேசுவது மட்டுமே தாமரை மற்றும் சின்ன பொண்ணு அம்மாவை சென்றடைகிறது. ஒன்று ராஜூவின் வழக்கு, இன்னொன்று அண்ணாச்சியின் வழக்கு, வீட்டை நள்ளிரவில் பெருக்கி கொண்டு காமெடிகளை அள்ளி விடும் ராஜூவை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு இருக்கின்றனர், தாமரையும், சின்ன பொண்ணு அம்மாவும். அந்த காட்சி அத்துடன் அகல்கிறது. ’ஒட்டு மொத்த வீடும் என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை ஒருவர் தீர்மானிப்பது போல இருக்கிறது’ என்று பவ்னி வருணிடம் முறையிட்டு கொண்டு இருக்கிறார். ஆம் அது என்னவோ உண்மை தான். அது அபிஷேக் என்று போட்டுடைக்க வேண்டியது தானே பவ்னி. ஹ்ம்ம் அத்தோடு பதினைந்தாம் நாளிற்குரிய எபிசோடு நிறைவடைகிறது. நேற்றைய தினத்தின் எபிசோடை விட இன்றைக்கு ஓரளவு பரவாயில்லை என்றே சொல்ல வேண்டும். பார்க்கலாம் இனி தானே வேகமெடுக்கும்.

” ஹைலைட்ஸ்: ஆயிரம் குறை சொல்லி ராஜூவின் பெயரையும் வெற்றியையும் மழுங்கடிக்க முயற்சிக்கும் அபிஷேக், தான் தோற்றுக் கொண்டிருப்பதை உணரவே மாட்டார் போல. ராஜூ, உள்ளே அவருடன் இருக்கும் உங்களின் நரி சூழ்ச்சிகளால் தான் தோற்றுக் கொண்டு இருக்கிறார். வெளியில் மக்களின் அவையில் அவர் ஜெயித்துக்கொண்டே தான் இருக்கிறார். இதை அபிஷேக் புரிந்து கொள்ளவில்லை எனில் சீக்கிரமே மக்களின் தீர்ப்பு அவருக்கு பாதகமாகும் என்பதி ஐயமில்லை “






About Author