தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 1,179 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
இன்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 1,179 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் கொரோனோ தொற்றுக்கு 16 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை மாநிலத்தில் 35,928 ஆக உயர்ந்திருக்கிறது.
இது போக தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,407 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் புதிய தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. மற்றும் மீட்பு விகிதமும் பெருகி வருகிறது. தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 5.30 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
“ மாநிலத்தில் வெகுவாக குறைந்து வரும் புதிய தொற்று, அதிகரித்து வரும் தடுப்பூசி உபயோகம் இதன் மூலம் மாநிலத்தில் கொரோனோ குறைந்து வரும் சூழலை உணர முடிகிறது “