கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,164 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,164 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 20 பேர் தமிழகத்தில் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,968 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 1,412 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 100 கோடியை தொட்டு இருக்கும் நிலையில் தமிழகத்தின் பங்கு 5.40 கோடியாக உள்ளது. பெரும்பாலானோர் தொடர்ந்து தானாக முன்வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்ள முயல்வதால் தடுப்பூசி உபயோகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

“ தொற்று உயரும் போது, இறப்பை கட்டுப்படுத்துவது என்பது அவசியமாகிறது. தடுப்பூசி மட்டுமே இறப்பைக் கட்டுப்படுத்தும் காரணகர்த்தாவாக இருந்த நிலையில், அதை திறம்பட செயல்படுத்து இருக்கிறது தேசமும் மாநிலங்களும் “

About Author