67 ஆவது தேசிய திரைப்பட விருது | இந்திய சினிமாவின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதைப் பெற்றார் ரஜினி காந்த்!
புதுடெல்லியில் நடைபெற்ற 67 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில், இந்திய திரைத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றார் ரஜினிகாந்த்.
67ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில், இந்திய சினிமாவின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதைப் பெற்றார் நடிகர் ரஜினி காந்த். தான் இதை தனது ஆசான் பால சந்தர் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாக உருக்கமுடன் தெரிவித்தார். தாதா சாகேப் விருதைப் பெறும் 51 ஆவது நபர் நடிகர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போக நடிகர் தனுஷ் அவர்களுக்கு ’அசுரன்’ படத்திற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அதே ‘அசுரன்’ பிரிவில் சிறந்த இயக்குநராக வெற்றிமாறனுக்கும், சிறந்த தமிழ்படம் என்ற முறையில் கலைப்புலி தாணு அவர்களுக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகர் பிரிவில் விஜய் சேதுபதிக்கு ’சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்காகவும், ’விஸ்வாசம்’ படத்தின் இசையமைப்பிற்காக டி.இமான் அவர்களுக்கும், ஸ்பெசல் ஜூரி பிரிவில் ’ஒத்த செருப்பு’ படத்திற்காக நடிகர் பார்த்திபனுக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது.
” இந்திய சினிமாவின் உயரிய விருதை உயரிய மேடையில் வாங்கி தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தி இருக்கும் ரஜினி காந்த் அவர்களுக்கு இடம் பொருள் சார்பாக வாழ்த்துக்கள் “