Raja Rani 2 Today Episode | 27.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணனுக்கு தான் அந்த போட்டியில் கலந்து கொண்டால் தானும் செருப்பு போடாமல் ஷூ போட்டுக்கொள்ளலாம் என்று ஆசைப்பட்டார் அதனால் ஆதியின் ஷூவை அவர் பொட்டுப்பார்க்க முயற்சித்தார். அப்போது அங்கு வந்த ஆதி , இதெல்லாம் உனக்கு எதற்கு. கடையில் வேலை பார்க்கும் உனக்கு எதுக்கு இந்த ஆசை என்று மாதம்தட்டி பேசினார். அப்போது பார்வதிக்கு ஒரு கடிதம் வந்தது. ஆனால் அது ஆங்கிலத்தில் இருந்ததால் சரவணனுக்கு படிக்க முடியவில்லை. அதையும் கிண்டலும் கேலியுமாய் பேசினான் ஆதி. உன் தகுதியே இதுதான் என்று கூறினான். அதற்கு சந்தியாவும் பதிலுக்கு பேசினார். இந்த சம்பவத்தால் சரவணன் மீண்டும் தன்னம்பிக்கை இழந்து தான் போட்டிக்கு போகப்போவதில்லை என்று மனம் மாறினார். இதனால் சந்தியா கோவம் கொண்டார். அவரை சமாதானம் செய்ய சரவணன் முயற்சித்தார். பின் சக்கரையின் திட்டப்படி ஒரு கடிதம் எழுதி சந்தியாவிற்கு சக்கரையிடம் அனுப்பி வைத்தார். அதற்கு பதில் சந்தியாவும் கடிதம் எழுதி அனுப்பினார். இதை ஒளிந்து கொண்டு பார்த்த அர்ச்சனா அது என்ன என்று தெரிந்து கொள்ள, சக்கரையை கடைக்கு போக விடாமல் தடுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author