தேசத்தில் மூன்றாவது அலையை ஏற்படுத்த வருகிறதா AY.4.2 என்ற உருமாறிய வகை கொரோனா?
வேகமாக பரவும் தன்மை கொண்ட AY.4.2 என்ற உருமாறிய வகை கொரோனா தென் மாநிலங்களில் ஆங்காங்கே கண்டறியப்பட்டு வருவதால் மூன்றாவது அலையை இந்த வகை வைரஸ் ஏற்படுத்த கூடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.
ஆந்திராவில் 7, கர்நாடாகாவில் 7, கேரளாவில் 4, தெலுங்கானாவில் 1 என்று AY.4.2 என்ற உருமாறிய வகை கொரோனா வைரஸ் தென் மாநிலங்களில் பெருக்கெடுத்து வருகிறது. இரண்டாவது அலையை ஏற்படுத்திய டெல்டா வகை வைரஸ் போல, மூன்றாவது அலையை இந்த AY.4.2 வகை தான் ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்களிடையே தற்போது நிலவி வருகிறது.
” இரண்டு மாஸ்க் அணிவது, முறையாக கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது, இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது ஆகியன யாவுமே இந்த வகை உருமாறிய கொரோனோவிலிருந்து தப்பிக்க உதவும் காரணிகள் “