ICC T20 WC 2021 | 26TH MATCH | இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா!
ICC T20 WC 2021 26th Match England VS Australia Preview
ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து ஆறாவது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா.
டி20 உலககோப்பையின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. துபாய் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
இதுவரை இரு அணிகளும் மோதிய 19 டி20 போட்டிகளில் பத்து போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் எட்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வென்று இருக்கிறது. ஒரு போட்டி முடிவில்லாமல் போய் இருக்கிறது. ஆஷஸ் அணிகள் இரண்டும் மோத இருப்பதால் ஆட்டம் நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும்.
England Possible XI: Jason Roy, Jos Buttler, Dawid Malan, Jonny Bairstow, Eoin Morgan, Liam Livingstone, Moeen Ali, Chris Woakes, Chris Jordan, Adil Rashid, Tymal Mills
Australia Possible XI: David Warner, Aaron Finch, Glenn Maxwell, Steve Smith, Marcus Stoinis, Mitchell Marsh, Matthew Wade, Pat Cummins, Mitchell Starc, Adam Zampa, Josh Hazlewood
“ குறைந்த ஸ்கோர் போட்டியோ, அதிக ஸ்கோர் போட்டியோ அதையெல்லாம் ரசிகர்கள் எதிர் பார்ப்பதில்லை, பலமும் பலமும் மோதிக் கொள்ளும் போது ஆட்டம் கடைசி வரை நீளுகின்ற அந்த விறுவிறுப்பு தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பது, அது நிச்சயம் இந்த போட்டியில் இருக்கும் நம்பலாம் “