Thamizhum Saraswathiyum Today Episode | 03.11.2021 | Vijaytv

thamizhumsaraswathiyum.03.11.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பாட்டி அருணுக்கு தொலைபேசியில் அழைத்து தனக்கு மூச்சு விட சிரமமாக இருக்கிறது என்று கூறினார். இதை கேட்டதும் பதறிப்போன அருண் வீட்டிற்க்கு கிளம்பி விட்டார். பின் நமச்சி தான் பாட்டியை அப்படி சொல்ல வைத்து அருணை கிளப்பியதாக கூறினார். பின் அனைவரும் காபி குடிக்க மாடிக்கு சென்றனர். அப்போது கை தவறி சந்திரகலா மீது சரஸ்வதி கொட்டிவிட்டார். அதற்கு சந்திரகலா மிகவும் கோபம் அடைந்தார். ஆனால் கோதை அதற்கு மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டார். கார்த்திக் அணிந்து இருந்த உடை வசுந்தரா உடைக்கு மேட்ச் ஆகவில்லை என்று கூறி, சந்திரகலா வேறு ஒரு உடயை அணிய வைத்தார். இது கோதைக்கு பிடிக்கவில்லை. வசுந்தரா அணிந்து இருந்த நகைகளை பார்த்து சரஸ்வதி, இந்த உடைக்கு இது செட் ஆகவில்லை என்று வேறு ஒன்று மாற்றி அணிவித்தார். இதை கேட்ட சந்திரகலா மீண்டும் சரஸ்வதி மீது கோபம் கொண்டார். சரஸ்வதி என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார். கோதையிடம் கலா இந்த சரஸ்வதி தான் தமிழுக்கு பார்த்த பெண்ணா என்று கேட்டார். அதற்கு கோதையும் ஆமாம் என்று கூறினார். அதை கேட்டதும் சந்திரகலாவிடம் உடனே கூற ஓடினர். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…