அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் நிலவும் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக நாளை முதல் சென்னையில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகம் முழுக்க ரெட் அலர்ட்டை அறிவித்து இருக்கிறது தமிழக அரசு.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவிக்கையில் வங்க கடலில் நிலவும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தமிழகம் நோக்கி நகரும் போது, தமிழகத்தில் ஆங்காங்கே கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையும் கனமழை முதல் மிக கனமழை இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
“ ஏற்கனவே தீவு போல காட்சியளிக்கும் சென்னை மாநகர், இன்னும் இரண்டு நாள் இருக்கும் மழையை எப்படி தாங்குமோ தெரியவில்லை. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாநகர்களில் போர்க்கால அடிப்படையில் துருத நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்று பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் “