சாதித்த மாயன்! Naam Iruvar Namakku Iruvar 09.11.2021 today episode review
Naam Iruvar New Maha Monisha
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று நாச்சியார் தீர்த்தம் கொடுப்பதை விட்டுக் கொடுத்தது பிடிக்காமல் சாரதா கோபத்தோடு இருக்கிறார். ஊரார் மற்றும் ரத்னவேல் நாச்சியாரை பாராட்டுகிறார்கள். பின்னர் வேண்டாவெறுப்பாக சாரதா தீர்த்தத்தை கொடுத்துவிட்டு மகாவிடம் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்குமாறு கூறுகிறார். ஒவ்வொருவராக வந்து மகாவிற்கு தீர்த்தம் கொடுக்கிறார்கள் கடைசியாக மகா மாயனை வம்பிழுப்பதுடன் அந்தப்பகுதி முடிவடைகிறது.
நடுவில், டிடி மற்றும் முருகேசனின் ஒரு காமெடி காட்சி வருகிறது. கடைசியாக மாயன் நாச்சியார் அனைவரும் தங்கள் தந்தை முன்நின்று நடந்தவைக்கு நன்றி கூறுகிறார்கள். சரண்யா மாயனை எரிச்சலோடு பார்க்க சரண்யாவின் மனதில் இருந்ததை மாயன் வெளிப்படையாகக் கூறுகிறார். சரண்யா கோபத்தோடு இடத்தை விட்டுச் செல்ல இன்றைய எபிசோட் முடிவடைகிறது.