குழப்பத்தில் சௌந்தர்யா – Barathi Kannamma today episode 11.11.2021 review
Barathi Kannamma desperate Soundarya
பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று கண்ணம்மா என்ன நடந்தாலும் தான் விவாகரத்து தரப் போவதில்லை என கூறிவிடுகிறார். சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினரிடம் ஒருவேளை விவாகரத்து கிடைத்தால் ஹேமாவை அழைத்துக்கொண்டு சென்று விடுவேன் எனவும் கூறிவிட்டு கிளம்புகிறார்.
கதவு பூட்டப்பட்டு இருப்பதை அறிந்த பாரதி, கண்ணம்மா வந்திருப்பார் என சந்தேகப்படுகிறார். சௌந்தர்யாவுக்கும் அவருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் வருகிறது. கண்ணம்மா ஒரு வழக்கறிஞரிடம் விவாகரத்தை பற்றி பேச, எட்டு வருடங்கள் பிரிந்து இருப்பதால் வழக்கு பாரதிக்கு சாதகமாக முடிய வாய்ப்புகள் அதிகம் என அவர் கூறுகிறார்
பின்னர், அஞ்சலியும் அகிலனும் கண்ணம்மாவின் நிலையைப் பற்றி புலம்புகிறார்கள். அஞ்சலி அவரது தந்தையிடம் இந்த விஷயத்தைக் கூற அவர் அதிர்ச்சி அடைகிறார். கண்ணம்மாவின் தந்தை நேரடியாக சௌந்தர்யாவிடம் வந்து பேச, சௌந்தர்யா தனது இயலாமையை கூறி, தானே குழப்பமாக இருப்பதாக கூறுகிறார். எபிசோட் முழுவதும் அடிக்கடி சௌந்தர்யா பாரதி சத்தியம் வாங்கியதால் தன்னால் எதுவும் செய்ய இயலாது எனக் கூறுவது மிக மிக சிரிப்பாக உள்ளது.